வருஷா வருஷம் இதே பிரச்னை.. கனவுலகில் வாழும் நிஜ கோமாளி.. யார் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்!
தன்னைத்தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் திவாகர் என்பவரை சினிமா விமர்சகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபகாலமாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கங்களில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் திவாகர் பந்தாவாக வீடியோ வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே ஸ்டைலாக ஒரு மேனரிசம் காட்டியிருப்பார். இந்நிலையில், அதேபோன்று திவாகரும் வாட்டர்மெலன் சாப்பிட்டுக்கொண்டு செய்வதை சகிக்க முடியாது. தன்னைத்தானே அவர் வாட்டர்மெலன் ஸ்டார் என்று சொல்லிக்கொள்கிறார்.
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு திவாகர் பேட்டியளிக்க வந்தார். அப்போது அவர் நான் ஏற்கனவே வாட்டர்மெலன் ஸ்டார் ஆகிட்டேன். மக்கள் மத்தியில் எனக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு அந்த தொகுப்பாளர் எதிர் கேள்வியாக சிலர் தங்களது நிஜ வாழ்க்கையில் வாழ முடியாததை நினைத்து கனவுலகில் வாழ்வார்கள். அதுபோன்று நீங்களும் கனவிலும் மிதக்கிறீர்களா என கேட்டதும் திவாகர் கடுப்பாகி விட்டார்.
எப்படி அந்த கேள்வி என்னை பார்த்து கேட்கலாம். சரி வாங்க உட்கார்ந்து பேசலாம். பாசிட்டிவான கேள்வி கேட்குறேன் வாங்க என்றதும் திவாகர் பாேனில் வீடியோ எடுத்து தொகுப்பாளர் தன்னை தரக்குறைவாக பேசுவதாக வீடியோ போட்டார். இதற்கு அந்த தொகுப்பாளரும் தக்க பதிலடி கொடுத்தார். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை கடுமையாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், சினிமா குறித்து அதிகம் பேசக்கூடிய நபராக திகழும் செய்யாறு பாலு என்பவர் வாட்டர் மெலன் ஸ்டாரை கோமாளி என்று கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பாகியுள்ளது.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் குறித்து பேசிய அவர், வடிவேலு கூறுவது வருடத்திற்கு 2 கோமாளிகளிடம் சிக்கி படுற பாடு என்பது போல், தமிழ் சினிமாவில் இதுபோன்ற கோமாளிகள் ஒன்னு இல்லை 12 விதமாக கிடைக்கிறது. இவர்களை கண்டுக்காம அப்படியே விட்டிருந்தா இந்த பிரச்னை வந்திருக்காது. யூடியூப் மற்றும் மீடியாக்கள் வியூவ்ஸ்களுக்காக இதுபோன்ற நபரை அழைத்து பேட்டி எடுப்பதன் விளைவு தான் இப்படி நடக்கிறது. நடிகர்களிடம் பேட்டி எடுக்கும் போதே பாசிட்டிவான கேள்விகள் என்று பேப்பரில் எழுதி கொடுக்கும் பழக்கம் இல்லை. யார் இந்த திவாகர், நிஜமாகவே கனவுலகில் தான் வாழ்கிறார்.
இந்த மாதிரி கோமாளித்தனமான வீடியோக்களால் மக்களுக்கு ஒன்றும் கிடைக்க போவது இல்லை. ஜி.பி முத்து அப்படித்தான் முன்பு இருந்தார். இப்போது அவர் கூட திருந்தி விட்டார். அதேபான்று வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். என்ன கன்றாவி இது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கோபமாக தனது யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.




















