Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Coimabatore Power Shutdown: கோவையில் இன்று (05.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் உக்கடம் மற்று எம்ஜிசி பாளைய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது

Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
இங்கும் மின் தடையா: Chennai Power Shutdown: சனிக்கிழமை கூடவா? சென்னையில் 50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
உக்கடம் 110 கே.வி.
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டரேட், அரசு மருத்துவமனை, ரயில் நிலைய பகுதி
எம்.ஜி.சி.பாளையம்
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























