Top 10 News Headlines: இந்தியர்கள் வெளியேற வேண்டும்! பஹல்காம் தாக்குதல்.. பதிலடி உண்டு! - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today April 24: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

அனைத்துக்கட்சி கூட்டம்:
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டம் நடக்கிறது.வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பதிலடி கொடுக்கப்படும்:
“பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும்.பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிர் பறிபோயுள்ளது. இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது” டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
தன் உயிரை விட்ட குதிரை வீரர்
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதியை எதிர்த்து போராடிய குதிரை வீரர் உயிரிழப்பு.பஹல்காமில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் குதிரை சவாரி தொழில் செய்து வந்தவர் சையத் அடில் ஹுசைன் ஷா; இவர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில், துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, தீவிரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிரிழப்பு
இந்தியர்கள் வெளியேற வேண்டும்
“இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்” பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி.
புறக்கணித்த செங்கோட்டையன்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று விருந்து கொடுத்தார் ஈபிஎஸ்
தமிழகம் வரும் குடியரசுத் துணைத் தலைவர்
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார்; உதகையில் ஏப். 25 நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் ஏப்.26ஆம் தேதி தோடர் கோயிலுக்கு செல்கிறார்; 27ஆம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
ஆசை ஆசையாய் வாங்கிய கார்
ஜப்பான்: 10 வருடமாக பணம் சேமித்து வைத்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஃபெரரி காரை வாங்கிய ஹான்கோன் என்ற நபர். ஷோரூமில் இருந்து ஒட்டிக் கொண்டு வந்தபோது, கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்ததால் சோகம்! காரில் இருந்து புகை வருவதை பார்த்த ஹான்கோன் அதனை நிறுத்தியதால், நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். இந்த காரை வாங்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. வாழ்க்கையில் யாருக்கும் இது போன்ற மோசமான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது என ஹான்கோன் வேதனை.
அரசு உத்தரவு:
பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, ஏப்ரல் 27ம் தேதி வரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவின் முதன்மை கல்வி அதிகாரி.
மூதாட்டி அடித்து கொலை
சென்னை போரூரில் 5 சவரன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு காந்திமதி (72) என்பவரை அடித்து கொலை செய்து, தற்கொலை செய்துகொண்டதுபோல் தூக்கில் தொங்க விட்டுச் சென்ற நபரால் பரபரப்பு. அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்த அஜய் என்பவரை ( சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீசார் விசாரணை
மும்பை வெற்றி
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி. 4 விக்கெட்கள் வீழ்த்திய மும்பை வீரர் ட்ரெண்ட் போல்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

