EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
EV vs Petrol Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது மின்சார காரா? அல்லது பெட்ரோல் காரா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

EV vs Petrol Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது மின்சார காரா? அல்லது பெட்ரோல் காரா? என்பதற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்சார கார் Vs பெட்ரோல் கார்:
இந்திய சாலை கட்டமைப்புக்கு மத்தியில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது, மின்சாரா காரா? அல்லது பெட்ரோல் காரா? என்பதை உறுதி செய்ய நாம் சில அம்சங்களை ஒப்பீடு செய்ய வேண்டி உள்ளது. அதில் வாகனத்தின் கொள்முதல் விலை, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு, சுற்றுச்சூழலின் தாக்கம் மற்றும் ரேஞ்ச் & உட்கட்டமைப்பு ஆகிய நடைமுறை சிக்கல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தினசரி பயணிக்கும் தூரம், உங்களது வாகனம் ஓட்டும் பழக்கம், பட்ஜெட் மற்றும் சார்ஜிங்கிற்கான அணுகல் ஆகியவற்றை சார்ந்தே மின்சாரா காரா? அல்லது பெட்ரோல் காரா? என்பதற்கான பதிலை பெற முடியும்.
மின்சார கார் Vs பெட்ரோல் கார் எது பெஸ்ட்?
1. கொள்முதல் விலை
பெட்ரோல் கார்கள் பொதுவாக விலை குறைவானவை. உதாரணமாக காம்பேக்ட் பெட்ரோல் காரான மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் இந்தியாவில் ரூ.6 முதல் ரூ.9 லட்சத்திலேயே கிடைக்கிறது. ஆனால், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற காரணங்களால் மின்சார வாகனங்களின் விலை அதிகமாகும். உதாரணமாக டாடா நெக்ஸானின் விலை ரூ.14.5 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. ஆனால், மின்சார வாகனங்களுக்கு சில மானிய சலுகைகள் கிடைக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில்,பெட்ரோல் கார்கள் மலிவு விலையிலேயே அணுகக் கூடியதாக உள்ளது. மின்சார வாகனங்கள் விலை அதிகமாக இருந்தாலும், மானியங்கள் அந்த பிரச்னையை சற்றே குறைக்கின்றன.
2. எரிபொருள் செலவு:
எரிபொருள் செலவு என்பது மைலேஜ் மற்றும் பெட்ரோல் விலையை சார்ந்ததாகும். உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் காரில் நாள் ஒன்றிற்கு 40 கிலோ மீட்டர் பயணித்தால் மாதத்திற்கு ரூ.2,400 செலவிட வேண்டி இருக்கும். இது ஓராண்டிற்கு 28 ஆயிரத்து 800 ருபாயை எட்டும்.
அதேநேரம், மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் என்பது மிகவும் மலிவாகும். டாடா நெக்ஸான் ஆனது ஒரு கிலோ மீட்டருக்கு சராசரியாக 0.15 KWh ஆற்றலையே பயன்படுத்துகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு KWh மின்சாரத்திற்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தினசரி 40 கிலோ மீட்டர் பயணிப்போருக்கான செலவு மாதத்திற்கு ரூ.600 மட்டுமே. அதுவே ஆண்டிற்கு ஆகும் செலவும் ரூ.7,200 மட்டுமே ஆகும். கூடுதலாக பொது சார்ஜிங் நிலையங்களை காட்டிலும் வீட்டில் சார்ஜ் செய்யும்போது இந்த செலவும் மேலும் குறையும்.
ஒட்டுமொத்தமாக பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனங்களுக்கான எரிபொருள் செலவு 70 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாகும்.
3. பராமரிப்பு செலவு:
பெட்ரோல் கார்களில் ஆயில், ஃபில்டர்ஸ் மற்றும் ஸ்பார்க் பிளக் ஆகியவற்றை மாற்றுவது உள்ளிட்ட சீரான பராமரிப்புகள் அவசியமாகும். இதற்கு ஒரு காம்பேக்ட் காரிற்கு ஆண்டிற்கு சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவாகலாம்.
மின்சார வாகனங்களில் உராய்வை எதிர்கொள்ளக்கூடிய பாகங்கள் (இன்ஜின், ட்ரான்ஸ்மிஷன்) மிகவும் குறைவு. டயர், பிரேக் மற்றும் சாஃப்ட்வேர் தொடர்பான பராமரிப்புகள் மட்டுமே உள்ளன. இதற்கான செலவு ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும். அதேநேரம், 8 முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டரி மாற்றும்போது உங்களுக்கான செலவு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில், குறைந்த காலத்திற்கு மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்தின்போது பேட்டரி செலவு அதிகம்.
4. சுற்றுச்சூழலின் தாக்கம்:
பெட்ரோல் கார்களானது ஒரு கிலோ மீட்டருக்கு 120 முதல் 150 கிராம் கார்பன் - டை - ஆக்சைடை வெளியேற்றுகிறது. இதனை தினசரி 40 கிலோ மீட்டர் என ஓராண்டிற்கு கணக்கிட்டால், 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு 1.2 முதல் 1.5 டன் கார்பன் - டை - ஆக்சைடை வெளியேற்றுகிறது.
வாகனங்களில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டு காரணிகல் வெளிப்படுவதில்லை. ஆனால், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை பொறுத்து உமிழ்வு அமையும். நிலக்கரி அதிகம் உள்ள மின் உற்பத்தி க்ரிட்களில், மின்சார வாகனங்கள் 50-80 கிராம்/கிமீ (0.5-0.8 டன்/ஆண்டு) வெளியிடுகின்றன. பேட்டரி உற்பத்தியிலும் அதிக கார்பன் தடம் உள்ளது (ஒரு வாகனத்திற்கு 5-10 டன்), ஆனால் மின்சார வாகனங்கள் 2-3 ஆண்டுகள் ஓட்டிய பிறகு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக செயல்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில் மின்சார வாகனங்கள் பசுமையானவை, குறிப்பாக தூய்மையான மின்சாரம் உள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புற காற்றின் தரத்திற்கும் சிறந்த தேர்வாகும்.
5. நடைமுறை சிக்கல்கள்:
- ரேஞ்ச்: பெரும்பாலான மின்சார வாகனங்கள் தினசரி 40 கிலோ மீட்டர் (நெக்ஸான் ரேஞ்ச் - 300 கிமீ) பயணம் என்பதை எளிதில் கடக்கும். பெட்ரோல் கார்களை அதைவிட அதிகமாகவே பயணிக்கக் கூடியவை. ஆனால் அவற்றின் எரிபொருள் டேங்கை அவ்வப்போது நிரப்ப வேண்டி இருக்கும்.
- சார்ஜிங் Vs டேங்க் ஃபில்லிங்: பெட்ரோல் நிலையங்கள் அதிகளவில் உள்ளன. எனவே அணுகி பெட்ரோல் போடுவதற்கு அதிகபட்சம் 5 நிமிடங்கள் ஆகலாம். மின்சார வாகனங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் என்றால் 30 முதல் 60 நிமிடங்களும், வீட்டிலேயே சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரமும் ஆகும். வீட்டிலேயே சார்ஜ் செய்வது சிறந்தது, ஆனால் சார்ஜர்கள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் பொது நிலையங்களை நம்பியிருக்க வேண்டி உள்ளது. ஆனால் அவை குறைவாகவே காணப்படுகின்றன. உதாரணமாக இந்தியாவில் 1.5 லட்சம் பெட்ரோல் நிலையங்களுக்கு சராசரியாக 10,000 சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன.
- உட்கட்டமைப்பு: சார்ஜிங் நெட்வர்க்குகள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. நகர்ப்புறங்களில் அவற்றின் அணுகல் எளிதாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் இது சிரமமானதாக உள்ளது.
- ஓட்டுனர் அனுபவம்: மின்சார வாகனங்களின் உடனடியான டார்க், மிருதுவான ஆக்சிலரேஷன், அமைதியான பயணங்கள் ஆகியவற்றால் தினசரி பயணங்கள் மேம்படுகிறது. போக்குவரத்து நெரிசலின் போது பெட்ரோல் கார்கள் கையாள சிரமமானதாக இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில், வீட்டில் சார்ஜிங் வசதி உள்ள நகர்ப்புற பயன்பாட்டாளர்களுக்கு மின்சார கார்கள் நல்ல தேர்வாக இருக்கும். அதேநேரம், சார்ஜிங் அணுகல்கள் இல்லாத மற்றும் போதிய உட்கட்டமைப்பு இல்லாத பகுதிகளுக்கு பெட்ரோல் கார்களே பிரதான தேர்வாகும்.
6. உரிமையாக்குவதற்கான மொத்த செலவு
தினசரி சராசரியாக 40 கிலோ மீட்டர் என்ற 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளப்படும்.
மாருதி ஸ்விஃப்ட் காரை சுமார் 7 லட்ச ரூபாய்க்கு வாங்குவதாக கருத்தில் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு எரிபொருள் செலவு ரூ.1.44 லட்சம், பராமரிப்பு செலவு ரூ.75 ஆயிரம் என மொத்தம் சுமார் 9.2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
அதேநேரம், டாடா நெக்ஸானை மானியம் போக சுமார் 13 லட்சத்திற்கு வாங்குவதாக கருத்தில் கொள்வோம். மின்சார செலவு 36 ஆயிரம் ரூபாய், பராமரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் என மொத்தம், 5 ஆண்டுகளுக்கு சராசரியாக13.61 லட்சம் செலவாகிறது.
இந்த ஒப்பீட்டை கருத்தில் கொண்டால், பேட்டரி மாற்றம் எதையும் செய்யாவிட்டால் 7 முதல் 10 ஆண்டுகால பயன்பாட்டின்போது பேட்டரி வாகனங்கள் மிகவும் குறைந்த செலவை கொண்டிருக்கும்.
இறுதி தீர்ப்பு என்ன?
மின்சார கார் யாருக்கு?
- வீட்டிலேயே சார்ஜிங் வசதி அல்லது எளிதில் பொது சார்ஜிங் நிலையங்களை அணுகக் கூடியவர்களுக்கும்
- தினசரி சுமார் 30+ கிலோ மீட்டர் பயணிக்கக் கூடியவராக இருந்தால்
- காரை சுமார் 7 ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால்
- நவீன ட்ரைவிங் அனுபவத்துடன் குறைந்த உமிழ்வுகளை வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பவராக இருந்தால் உங்களுக்கு மின்சார வாகனம் சிறந்த தேர்வாக இருக்கும்.
பெட்ரோல் கார் யாருக்கு?
- போதிய சார்ஜிங் வசதி இல்லாத கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
- குறைந்த பட்ஜெட்டில் காரை சொந்தமாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு
- மின்சார வாகனங்களுக்கான போதிய வசதி இல்லாத பகுதிகளுக்கு அடிக்கடி பயணிப்பது, வாகனங்களின் ரேஞ்சை தாண்டிய பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு
- 3 அல்லது 5 ஆண்டுகளில் காரை மாற்றும் திட்டம் இருப்பவர்களுக்கு பெட்ரோல் கார் தான் சிறந்த தேர்வாக இருக்கும்
பரிந்துரை என்ன?
வீட்டு சார்ஜிங்கை பயன்படுத்தி தினசரி 40 கிலோ மீட்டர் பயணிப்பவருக்கு, அதிக ஆரம்ப செலவு இருந்தபோதிலும், மின்சார கார் நீண்ட காலத்திற்கு (5+ ஆண்டுகள்) செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வாக இருக்கும். சார்ஜிங் சிரமமாக இருந்தால் அல்லது குறுகிய காலம் மட்டுமே காரை கொண்டிருக்க திட்டமிட்டு பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பம் தேவைப்பட்டால், பெட்ரோல் கார் சிறந்த தேர்வாகும். உங்கள் முடிவை இறுதி செய்ய உள்ளூர் சலுகைகள் மற்றும் சார்ஜிங் நிலையங்களின் அணுகல் தன்மையை சரிபார்க்கவும்.





















