அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கட் ராஜ் சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் அவரது சிகிச்சை பிரபாஸ் 50 லட்சம் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்

மரணப்படுக்கையில் ஃபிஷ் வெங்கட்
தெலுங்கில் கிட்டதட்ட 150 படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் ஃபிஷ் வெங்கட் என்கிற வெங்கட் ராஜ். சிரஞ்சீவி , பவன் கல்யாண் , அல்லு அர்ஜூன் , ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்களுடம் இணைந்து நடித்துள்ளார். தற்போது சிறுநீர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிரை காப்பாற்ற முடியும் என அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார்.
தனது அப்பா நடித்த அத்தனை ஸ்டார்களிடமும் அவர் உதவி கேட்டுள்ளார். இப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ் ஃபிஷ் வெங்கட் சிகிச்சைக்கு தேவையான 50 லட்சம் பணத்தை கொடுக்க முன்வந்துள்ளார். மேலும் மேற்கொண்டு சிகிச்சைக்கு ஏற்படும் செல்வையும் தானே ஏற்றுக்கொள்வதாக பிரபாஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக ஸ்ரவந்தி கூறியுள்ளார்.
" என் அப்பா , சிரஞ்சீவி , பவன் கல்யாண் , அல்லு அர்ஜூன் , ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்களுடன் அத்தனை நல்ல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இன்று அவரைப்பற்றி யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. என் அப்பாவின் சிகிச்சைக்கு ஏற்ற ஏற்பாடுகளை அவர்கள் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்ரவந்தி கூறியுள்ளார்.





















