HC Judge Removal: அடேங்கப்பா..! நீதிபதிய வேலைய விட்டு தூக்குறது இவ்ளோ கஷ்டமா? எக்கச்சக்க சிக்கல்? அதிகாரம்..
HC Judge Varma Impeachment: வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கிய விவகாரத்தில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

HC Judge Varma Impeachment: உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும் ஒருவரை பதவிநீக்கம் செய்வது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
யஷ்வந்த சர்மாவை பதவிநீக்கம் செய்ய முடிவு:
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த சர்மா வீட்டில், கடந்த மார்ச் மாதத்தில் கட்டுக் கட்டாக எரிந்த நிலையில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவரை பதவிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதோடு, எதிர்வர்ம் மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, தனது வீட்டிலிருந்து எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ய்ஷ்வந்த வர்மா மறுப்பு தெரிவித்து உள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட குழு வலியுறுத்தியும் அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து, அவர் மீதான பதவி நீக்க நடவடிக்கையை தொடங்க, குடியரசு தலைவருக்கு வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி பதவி நீக்க தீர்மானம் என்றால் என்ன?
பதவிநீக்க தீர்மானம் என்பது உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் உள்ள, ஒரு நீதிபதியை பணிநீக்கம் செய்வதற்கான அரசியலமைப்பு நடைமுறையாகும். நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டால், அவரை குடியரசு தலைவரின் அனுமதியின்றி பதவிநீக்கம் செய்யவே முடியாது. அதற்கு குடியரசு தலைவருக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாகும். அரசியலமைப்புச் சட்டம் உண்மையில் ' குற்றச்சாட்டு ' என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிபதிகளை நீக்குவதற்கான நடைமுறை 1968 ஆம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளதோடு இரண்டு அரசியலமைப்பு விதிகளில் குறிப்பிடவும்பட்டுள்ளது. அதன்படி, பிரிவு 124 (உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு) மற்றும் பிரிவு 218 (உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு) பொருந்தும்.
பதவி நீக்கம் எப்படி செய்யப்படுகிறது?
- முதல் நடவடிக்கையாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறிப்பிட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்படும்
- குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் தீர்மானத்தில் குறைந்தபட்சம் 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். இதை மேலும் விவாதத்திற்கு கொண்டு செல்ல மக்களவையை சேர்ந்த 100 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்
- உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெற்றதும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் சபையின் முன்னாள் தலைவர் அல்லது சபாநாயகர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை ஆராய்வார்
- தீர்மானத்தை ஆராய்பவருக்கு அதனை நிராகரிப்பதற்கான அதிகாரமும் உள்ளது
- ஒருவேளை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த அவையின் தலைவர் அல்லது சபாநாயகர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவார்
- குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கக் கூடிய ஒரு சிறந்த சட்ட நிபுணர் ஆகியோர் இடம்பெறுவர்
- குழுவானது யஷ்வந்த் சர்மாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறிந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்
எத்தனை வாக்குகள் தேவை?
இரு அவைகளிலும் இந்த தீர்மானமானது சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது, அவைக்கு வருகை தந்து வாக்களிப்பவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வாக்குகள் அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே யஷ்வந்த் வர்மாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரை குடியரசு தலைவரால் பதவிநீக்கம் செய்ய முடியும்.
ஏதேனும் ஒரு நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா?
சுதந்திர இந்தியாவில் தற்போது வரை எந்தவொரு நீதிபதியும் இந்த முறையில் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த மோசமான பட்டியலில் முதல் நபராக இருப்பதை தவிர்க்க, யஷ்வந்த் வர்மா தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். அதேநேரம், ஏற்கனவே 5 முறை பதவி நீக்க தீர்மானங்கள் இந்திய நாடாளுமன்றதில் முன்னெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
- 1993ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி. ராமசாமி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்களிக்க மறுத்ததால் பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைந்தது.
-
2011 ஆம் ஆண்டில் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.டி. தினகரன் முறைகேடு செய்ததாகவும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சௌமித்ரா சென் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், இருவருமே தங்கள் பதவி நீக்க விசாரணைகள் முடிவடைவதற்கு முன்பே தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்தனர்.
-
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த கருத்துகளுக்காக குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. பர்திவாலாவை பதவி நீக்கம் செய்ய 2015ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது
- கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா நிர்வாக முறைகேடு மற்றும் தன்னிச்சையாக வழக்குகளை ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில், அப்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.





















