abp live

வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ் இதோ!

Published by: ஜான்சி ராணி
abp live

வாழைப்பழம் ஏராளமான ஊட்டச்சத்து மிகுந்தது. பொட்டாசியம் நிறைந்த வாழப்பழத்தை தினமும் சாப்பிடலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

abp live

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்,நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். தசை வளர்ச்சிக்கு வாழைப்பழம் உதவும்.

abp live

வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க அலுமினியம் ஃபாயில் ஷீட்டில் அதன் தண்டுகளை சுற்றி வைக்கலாம். வாழைப்பழத்தில் கருப்பு திட்டுகள் ஏற்படாமல் இருக்கும்.

abp live

வாழைப்பழத்தில் கயிற்றில் தொங்க விட்டு வைப்பதால் அது பிரெஷ்ஷாக இருக்க உதவும். மேடை மீது வைப்பது, கண்ணாடி குடுவை, பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்டவற்றில் வைக்காமல் இருப்பது நல்லது.

abp live

மற்ற பழங்களை வாழைப்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டாம். ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுடன் வாழைப்பத்தோடு வைக்க வேண்டாம்.

abp live

ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களிலிருந்து எத்திலீன் வாயு வெளியேறும். அது வாழைப்பழம் விரைவில் கனிந்துவிடும் வாய்ப்பை அதிகரிக்கும். 
 

abp live

வாழைப்பழத்தை ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். குளிரான வெப்பநிலை வாழைப்பழம் அழுவிடும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

abp live

வாழைப்பழத்தை ஸ்டோர் செய்ய இருக்கிறீர்கள் என்றால் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விசயம்; நன்றாக பழுத்த பழத்தை வாங்க வேண்டாம். செங்காயாக இருப்பதை வாங்கலாம். 

abp live

ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். ஆனால் இப்படி வைப்பதற்கு நீங்கள் ஃப்ரெஷ்ஷான அடிபடாத வாழைப்பழத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.