Vaibhavi Upadhyaya Died : பிரபல நடிகை வைபவி உபாத்யாயா கார் விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
சாராபாய் vs சாராபாய் நடிகை வைபவி உபாத்யாயா கார் விபத்தில் மரணமடைந்தார்.
‘சாராபாய் vs சாராபாய்’ இந்தி சீரியல் மூலம் பிரபலமான டிவி நடிகை வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்தார்.
2004 முதல் 2006 வரை ஸ்டார் ஒன் சேனலில் ‘சாராபாய் vs சாராபாய் தொடர் ஒலிபரப்பானது’. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் வைபவி உபாத்யாயா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்கு பிறகு வைபவி பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (மே 23) வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் வைபவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு அவரது இறுதிச் சடங்குகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
15 வருடங்களுக்கும் மேலாக வைபவியை நன்கு அறிந்தவரான மஜேதியா,தனது பதிவில் வைபவிக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், வாழ்க்கை மிகவும் எதிர்பாராதது, வைபவி சிறந்த நடிகை என்றும், சாராபாய் vs சாராபாய் மற்றும் 'மல்லிகை' என்று பிரபலமாக அழைக்கப்படும் அன்பு தோழி வைபவி விபத்தில் சிக்கி மரணமடைந்ததாகவும் தெரிவித்தார். இறுதி சடங்குகளுக்காக அவரது உடலை அவரது குடும்பத்தினர் மும்பைக்கு கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சாராபாய் vs சாராபாய்-ல் வைபவி உபாத்யாயாவுடன் இணைந்து நடித்த நடிகை அனுபமா மறைந்த வைபவிக்கு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துள்ளார். மேலும் அனுபமா வைபவி உபாத்யாயாவின் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு, அவர் மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். ரூபாலி கங்குலி வைபவியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, வைபவி விரைவில் உலகை விட்டு சென்று விட்டதாக பதிவிட்டுள்ளார். வைபவி உபாத்யாயா மறைவால் சின்னத்திரை நடிகர், நடிகைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க