புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!
சென்னை மாநகராட்சி ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் 2022ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி, வெற்றியும் பெற்றுள்ளார். இவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று
வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், சென்னை மாநகராட்சி ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதுகலை மருத்துவம் படித்து வரும் அரவிந்த் 2022ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளார். இவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மகன் வெற்றி பெற்றது குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறும்போது, ’’2022ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அகில இந்திய அளவில் அதிகப் போட்டி நிறைந்த தேர்வில் 361ஆவது இடம் பிடித்த அரவிந்த் ராதாகிருஷ்ணனை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.
கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் மகனே!
முதுகலை பொது மருத்துவம் படித்துக்கொண்டே, இடையில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி, அதில் வெற்றியும் பெற்றதை எண்ணிப் பெருமைகொள்கிறேன். தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கும் முயற்சித்தவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்’’ என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: UPSC Result 2022 TN List: யூபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து 39 பேர் தேர்ச்சி; வெளியான முழு பட்டியல் இதோ!