திரையுலகில் அதிர்ச்சி... பிரபல காமெடி நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்!
ஒரு சில திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த டெலிபோன் சுப்பிரமணி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விவேக். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் சமூக கருத்துக்களை மையப்படுத்தியே இவரது காமெடி காட்சிகள் இருக்கும்.
அதுமட்டுமின்றி அனைவருடனும் அன்பாகவும், தன்மையாகவும் பழக கூடியவர். பல துணை நடிகர்களுக்கு தனது படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படி விவேக் மூலம் காமெடியனாக நடிக்க வாய்ப்பு பெற்றவர் தான் டெலிபோன் சுப்பிரமணி.
விவேக் உடன் நீண்ட காலமாக பயணித்து வந்த இவர், அவருடன் இணைந்து யுனிவர்சிட்சி, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெலிபோன் சுப்பிரமணி தற்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்த இவருடைய உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் முன்பு, தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் இவருக்கு டெலிபோன் மணி என பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைத்தளம் மூலமாக பலர் தங்களின் இரங்கலை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.





















