(Source: ECI/ABP News/ABP Majha)
முடிவெட்டும் போது தண்ணீருக்கு பதிலாக எச்சில்.. வழக்கில் சிக்கிய ஹேர்ஸ்டைலிஸ்ட்!
"ஜாவித் ஹபீபின் பயிலரங்கில், அவர் என்னை முடி வெட்டுவதற்காக மேடைக்கு அழைத்தார். ஹேர்கட் செய்யும் போது தண்ணீருக்குப் பதிலாக துப்புவது எப்படி என்று காட்ட முயன்றார். நான் ஹேர்கட் செய்துகொள்ளவில்லை"
முடிவெட்டுபவர் தலையில் எச்சில் துப்பியதாக ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜாவித் ஹபீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 355 (கடுமையான ஆத்திரமூட்டல் அல்லது ஒரு நபரை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்) ஆகியவற்றின் கீழ் பிரபல ஒப்பனையாளர் ஆன ஜாவித் ஹபீப் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
This is Javed Habeeb... Spitting instead of using water... absolutely horrible 🤮🤬 pic.twitter.com/8s7xaE8qfO
— Kungfu Pande 🇮🇳2.0 (@pb3060) January 5, 2022
இந்த வழக்குகள் தொற்றுநோய்ச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளாக வருகின்றன. உ.பி.யின் முசாபர்நகரில் நடந்த ஒரு நிகழ்வில் ஹபீப் ஒரு பெண்ணின் தலைமுடியில் எச்சில் துப்பிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, அவரது நடத்தைக்காக சமூக ஊடகங்களில் பலர் அவரை கண்டித்ததை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
जावेद हबीब का थूक का एक और वीडियो--
— Abhay Pratap Singh (@IAbhay_Pratap) January 6, 2022
अर्थात जावेद हबीब महिलाओं की माँग में थूकने का आदतन अपराधी है?
जावेद हबीब के थूक को रसमलाई समझकर दांत फाड़ रही कूल ड्यूड बालाओं के लिए क्या कहा जाए अब😑 pic.twitter.com/b3oew4BDCA
தேசிய மகளிர் ஆணையம் வியாழக்கிழமை இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச டிஜிபிக்கு தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். "@NCWIndia இந்த சம்பவத்தை அறிந்துள்ளது. இந்த வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு @dgpup க்கு தலைவர் @sharmarekha கடிதம் எழுதியுள்ளார். எடுக்கப்பட்ட நடவடிக்கையை விரைவில் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்" என்று ஆணையம் ட்வீட் செய்தது.
@NCWIndia has taken cognizance of the incident. Chairperson @sharmarekha has written to @dgpup to immediately investigate the veracity of this viral video and take appropriate action. The action taken must be apprised to the Commission at the earliest.https://t.co/3wPS2Lavyt
— NCW (@NCWIndia) January 6, 2022
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹபீப் நடத்தி வந்த ஒரு பயிலரங்கத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு வீடியோ வைரல் ஆகி வருகிறது, அதில் எச்சில் துப்பப்பட்ட பெண் தான் கலந்து கொண்ட கருத்தரங்கில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். "ஜாவித் ஹபீபின் பயிலரங்கில், அவர் என்னை முடி வெட்டுவதற்காக மேடைக்கு அழைத்தார். ஹேர்கட் செய்யும் போது தண்ணீருக்குப் பதிலாக துப்புவது எப்படி என்று காட்ட முயன்றார். நான் ஹேர்கட் செய்துகொள்ளவில்லை," என்று பூஜா குப்தா என்று கூறினார்.
Famous hairstylist-businessman #JawedHabib spit in a woman's hair while doing her hair as a joke. We all saw the video
— Srinivas Reddy ( శ్రీనివాస్ రెడ్డి ) (@bullseye11007) January 6, 2022
Now listen to the woman's reaction. She says he called her from audience but went on to do that, making her feel disgusted
// Posted as received // pic.twitter.com/hTSDxIbo9s