(Source: ECI/ABP News/ABP Majha)
மூட்டை நிறைய 2 ரூபாய் நாணயங்கள்..! ஆடிப்போன ஷோ ரூம் ஊழியர்கள்..! கனவு பைக்கை வினோதமாக வாங்கிய வியாபாரி..!
மேற்கு வங்காளத்தில் இரண்டு ரூபாய் காசுகளை சாக்கு மூட்டையில் சேமித்து, கனவு பைக்கினை வாங்கியுள்ளார் இளைஞர் ஒருவர். அவர் கொடுத்த காசுகளை ஷோரூம் ஊழியர்கள் மூன்று நாட்கள் எண்ணியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் இரண்டு ரூபாய் காசுகளை சாக்கு மூட்டையில் சேமித்து, கனவு பைக்கினை வாங்கியுள்ளார் இளைஞர் ஒருவர். அவர் கொடுத்த காசுகளை ஷோரூம் ஊழியர்கள் மூன்று நாட்கள் எண்ணியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள நொய்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரட்டா சர்கார் எனும் இளைஞர் தனது கனவு பைக்கினை வாங்க செய்த முயற்சி அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் தன்னுடைய சிறுசேமிப்பை 2 ரூபாய் நாணயங்களாக சேர்த்துள்ளார்.
பின்னர், தன்னுடைய சேமிப்பை இரண்டு சாக்குகள் மற்றும் ஐந்து பைகளில் சேமித்து வைத்து அங்குள்ள பைக் ஷோ ரூமிற்கு வாங்கச் சென்றுள்ளார். தொடக்கத்தில் இவரிடம் உள்ள மூட்டைகளையும், நாணயங்களையும் கண்டு அதிர்ச்சியடைந்த ஷோ ரூம் ஊழியர்கள் பின்னர் அவரிடம் இருந்த காசைப் பெற்றுக்கொண்டு பைக்கை விற்பனை செய்தனர். சிறு வியாபாரம் நடத்தி வரும் இவரது பெயர் சுப்ரதா சர்கார் ஆகும். இவர் ஷோரூமில் செலுத்திய இரண்டு ரூபாய் காசுகளின் மொத்த தொகை மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்.
முதன் முதலில் இப்படியான சிந்தனை வரக்காரணமாக அவர் கூறியது, "நாட்டில் 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு காரணத்தினால், ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதுமே ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக சில்லறைக் காசுகளை பயன்படுத்த தொடங்கினர்.
இதனால் சில்லறை காசுகளின் ப்யன்பாடு அதிகமானது. என்னிடம் பொருட்கள் வாங்கும் என்னுடைய வாடிக்கையாளர்களே சில்லறைக் காசுகளை ஒரு பாலிதீன் பைகளில் கட்டி கொடுத்து பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் என்னிடத்தில் சில்லறைக் காசுகள் அதிகமாக சேர ஆரம்பித்தது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சில்லறைக் காசுகளை அப்படியே சேமித்து வைக்க தொடங்கினேன். குறிப்பாக இரண்டு ரூபாய் காசுகளை மட்டுமே சேமித்து வந்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக சேமித்து வந்த தொகையினை கொண்டு என்னுடைய கனவு பைக்கினை வாங்க, பைக் ஷோரூம் மேனேஜரிடம் பேசினேன். அவரும் சில்லறைக் காசுகளைக் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார். தற்போது சேமித்து வைத்த காசுகளைக் கொடுத்துவிட்டு பைக்கினை வாங்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
பைக் ஷோரூம் மேனேஜர் பிராபிர் பிஸ்வாஸ் இது குறித்து கூறியது, அவர் என்னிடம் வந்து கூறியதும் நான் உடனே சரி சொல்லிவிட்டேன். மேலும், ஒரு ஆட்டோவை அனுப்பி காசுகளை எடுத்துவரச் செய்தேன். அவர்கள் ஏற்கனவே ஐந்து பைகள் மற்றும் இரண்டு சாக்குகளில் கட்டி வைத்திருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அவரிடம் பைக் விற்கப்பட்டு, சாவி கொடுத்தாகிவிட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக ஐந்து ஊழியர்கள், அவர் சேமித்து வைத்த தொகையினை எண்ணி முடித்துள்ளனர். மூன்று நாட்கள் எண்ணிய தொகை 1.50 லட்சம் ரூபாய், எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்