சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் இருப்பது குறித்து டூரிஸ்ட் பேமிலி கதாநாயகி மனம் திறந்து பேசியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் யோகலட்சுமி. இந்த படத்தில் நடித்த பிறகு அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அவரிடம் சமீபத்தில் சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை இருப்பது குறித்து கேள்விபட்டது.
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்த யோகலட்சுமி:
இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகை யோகலட்சுமி, "சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்ம நடந்துகொள்வது, நம்ம எதிர்கொள்வதுனு ஒன்னு இருக்குதுல. அது ரொம்ப முக்கியம். அவங்க அப்படி தப்பா கேட்டாலும் நீ எப்படி இருக்கியோ, அப்படியே இரு. உனக்கு அது வேணும்னா நம்ம ஒன்னும் பண்ண முடியாது. வேண்டாம்னு நீ ஸ்டராங்கா இருக்கனா ஸ்ட்ராங் அவ்வளவுதான்.
அது இருந்தாதான் வாய்ப்பு கிடைக்கும், இல்லாட்டினா வாய்ப்பு கிடைக்காது அப்படின்னா அது அவங்க முடிவு. ஆனா எல்லாமே நம்ம இருக்குறது பொறுத்துதான். உனக்கு வேண்டாம்னா வேண்டாம்னு ஸ்ட்ராங்கா இரு."
இவ்வாறு அவர் கூறினார். நடிகை யோகலட்சுமி டூரிஸ்ட் பேமிலி படம் மட்டுமின்றி ஹார்ட் பீட், சிங்கபெண்ணே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான டூரிஸ்ட் பேமிலி படத்தை அபிஷன் ஜீவ்நித் இயக்கியிருந்தார். ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் ரூபாய் 75 கோடி வரை வசூலை குவித்தது. இந்த படத்திற்கு பிறகு படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தில் நடித்த யோகலட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் பிரபலங்கள்:
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகளவு எழும் புகார்களில் நடிகைகளை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வைரமுத்து உள்பட பல்வேறு பிரபலங்கள் கடந்த சில ஆண்டுகளில் சிக்கியது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு எழுந்த மீ டூ ஹேஷ்டேக் மூலமாக பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.





















