நீங்க பாசிட்டிவ் ரிவியு மட்டும் சொல்லுங்க பணம் தரோம்...நீயா நானாவில் அம்பலமான உண்மை
நீயா நானா நிகழ்ச்சியில் திரைப்படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்கச் சொல்லி நடிகர்கள் மட்டும் தயாரிப்பாளர்கள் சார்பாக பணம் தருவதாக திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நீயா நானா
கடந்த வார நீயா நானா நிகழ்ச்சி மக்களிடம் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பக்கம் யூடியூபின் சினிமா விமர்சனம் செய்பவர்களும் இன்னொரு பக்கம் அவர்களின் விமர்சனங்களில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டுபவர்கள் என இரு தரப்பு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சினிமா விமர்சகர்கள் பெரிய நடிகர்களின் ரசிகர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பாசிட்டிவான விமர்சனங்கள் வழங்க பணம் தரப்படுவது பற்றியும் பேசப்பட்டது.
தனிப்பட்ட லாபங்களுக்காக விமர்சனம் செய்வது, நடிகர்களின் நட்புறவிற்காக விமர்சனத்தில் அவர்களை பாராட்டுவது, அளவுகோல் இல்லாத விமர்சனம் , கவனத்தை ஈர்க்க விமர்சனம என இன்றைய யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது பல விதமான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
சினிமாவில் பெயிட் ரிவியுஸ் இருக்கா ?
சினிமாவில் பணம் வாங்கி விமர்சனங்கள் சொல்லப்படுகிறதா என கோபிநாத்தின் கேள்விக்கு சிலர் அப்படி ஒன்று கிடையவே கிடையாது என சில வாதிட்டனர். ஆனால் பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்க பெரிய நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சார்பாக பணம் கொடுக்கப்படுவதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஆண்டு வெளிப்படையாகவே அனைத்து விமர்சகர்களுக்கும் பணம் கொடுத்து விமர்சனம் வழங்க சொல்லப்படுகிறது என பிரபல விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். இந்த மாதிரியான சூழல் நிலவும்போது நேர்மையாக இருந்து விமர்சனம் வெளியிடும் ஒருவரும் பணம் வாங்க தூண்டப்படுவதாக மற்றொரு பிரபல விமர்சகர் தெரிவித்துள்ளார்
ரசிகர்களிடம் இருந்து மிரட்டல்
மேலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை கடுமையாக விமர்சித்தால் அவரது ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் அழைத்து மிரட்டல் விடுவதாகவும் ஒரு விமர்சகர் தெரிவித்திருந்தார். இதனால் படம் நன்றாக இல்லை என்றாலும் சில நடிகர்களின் படங்களை ஓரளவிற்கு மேல் வெளிப்படையாக விமர்சிக்க முடிவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
Give this reviewer a medal 🏅 (Avinash) for boldly speaking the truth and exposing how the system breeds corruption!" 🔥 https://t.co/CEbLXTy6Dr pic.twitter.com/rjTyDieDQQ
— Mahesh (@MaheshKumar2507) June 8, 2025






















