9 ஆயிரம் கோடி கடன்...மோசடி செய்தது வங்கிகள்தான்...பரபரப்பை கிளப்பிய மல்லையா பாட்காஸ்ட்
9 ஆயிரம் கோடி பணமோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் புதிய பாட்காஸ்ட் ஒன்று வெளியாகி கவனமீர்த்துள்ளது

விஜய் மல்லையா
வங்கிகளிடம் 9000 கோடி கடன் வாங்கி பணமோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார் விஜய் மல்லையா. அங்கிருந்தபடியே தன் மீதான் குற்றங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். விஜய் மல்லையா கலந்துகொண்ட பாட்காஸ்ட் யூடியூபில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாட்காஸ்டில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் சரிவு , தன் மீதான குற்றசாட்டுகள் , வங்கிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றி பல சர்ச்சையான விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்
நான் மோசடிக்காரன் இல்லை - விஜய் மல்லையா
" 2016 மார்ச் மாதத்தில் இருந்து நான் இந்தியா திரும்பவில்லை. என்னை நீங்கள் தப்பியோடியவர் என்று கூறலாம். ஆனால் நான் மோசடிக்காரன் இல்லை. நான் இந்தியா திரும்பாததற்கு காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நான் கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உத்தரவாதமும் , சட்டப்படி எனக்கு நியாயம் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருந்தால் நிச்சயம் நான் இந்தியாவில் வந்து சட்டப்போராட்டம் நடத்துவதைப் பற்றி யோசிப்பேன் " என மல்லையா தெரிவித்துள்ளார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பற்றி விஜய் மல்லையா
"2008 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி இந்தியாவின் ஒவ்வொரு துறையையும் பாதித்தது. பணம் நின்றுவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதனால் நான் அன்றைய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜீயை சந்தித்தேன். என் நிலைமைச் சொன்னேன். ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். கிங்ஃபிஷர் விமானங்களை குறைக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் ஊழியர்களை குறைக்க வேண்டாம் என்றும் வங்கிகல் கடன் தரும் என்றும் அவர் கூறினார். அப்படிதான் வங்கிகளிடம் இருந்து நாங்கள் கடன் வாங்கினோ. நாங்கள் கடன் வாங்கிய நேரம் நிறுவனம் சிறப்பாக செயல்படவில்லை.
வங்கிகள் பற்றி மல்லையா
" நான் வங்கிகளிடம் வாங்கிய மொத்த கடன் ரூ 6200 கொடி மட்டுமே. ஆனால் இதுவரை என்னிடம் வங்கிகள் 14 ஆயிரம் கோடி வரை முடக்கியுள்ளார்கள்." என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து முறையிட்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் அவர் மேலும் வங்கிகளால் வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீச் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





















