Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துவந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1000-க்கு மேல் குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன தெரியுமா.?

சமீப காலமாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் உயர்வை கண்டு, 73 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமிற்கு 150 ரூபாயும், சவரனுக்கு 1,200 ரூபாயும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 9,130 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று கிராமிற்கு 150 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், ஒரு சவரன் தங்கம் 73,040 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 71,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஜூன் 1-ம் தேதியிலிருந்து தொடர் உயர்வை கண்ட தங்கத்தின் விலை
கடந்த 1-ம் தேதி, ஒரு கிராம் 8,920 ரூபாயாகவும், ஒரு சவரன் 71,360 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 2-ம் தேதி கிராம் 9 ஆயிரத்தை கடந்து, 9,060 ரூபாயாகவும், சவரன் 72 ஆயிரத்தை கடந்து, 72,480 ரூபாயாகவும் விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, 3-ம் தேதியும் சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,080 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,640 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதியும் உயர்வைக் கண்ட தங்கம், ஒரு கிராம் 9,090 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து உயர்ந்த தங்கத்தின் விலை, 5-ம் தேதி ஒரு கிராம் 9,130 ரூபாயாகவும், ஒரு சவரன் 73 ஆயிரத்தை கடந்து, 73,040 ரூபாயாகவும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, 6-ம் தேதி விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு தங்கம் விற்பனையானது.
இந்த நிலையில்தான், இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்துள்ளது.
1 ரூபாய் குறைந்த வெள்ளி
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 117 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் தொடர் உயர்வைக் கண்டு, 118 ரூபாய் என்ற உச்ச அளவை எட்டியிருந்த நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 1 மற்றும் 2-ம் தேதிகளில் 111 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 113 ரூபாயாக விற்பனையானது.
அதைத் தொடர்ந்து, மேலும் 1 ரூபாய் உயர்ந்து, 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பின்னர், 6-ம் தேதியான நேற்று அதிரடியாக கிராமிற்கு 4 ரூபாய் உயர்ந்த வெள்ளியின் விலை, 118 ரூபாயை எட்டியது. இந்த நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்வதும், குறைவதுமாக இருப்பதால், மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.





















