ENG Vs WI: முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.. பட்லர் சதம் மிஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து. இதைத்தொடர்ந்து நேற்று இரு அணிகளுக்கும் இடையே முதல் டி 20 போட்டி நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவுடன் டெஸ்ட் போட்டிகளில் களம் காண இருக்கும் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை பதம் பார்த்து வருகிறது.
செஞ்சுரியை மிஸ் செய்த பட்லர்
முதலில் ஆடிய இங்கிலாந்து இணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 188 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 96 ரன்களை குவித்தார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இடம்பிடித்த இவர் தனது அதிரடி ஆட்டத்தால் அந்த அணியின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தார். பின்னர் பிளே ஆப் சுற்றுகளில் மற்றும் விளையாட முடியாத சூழலில் ஜோஸ் பட்லர் நாடு திரும்பினார். இந்நிலையில் சொந்த நாட்டிற்கு விளையாடும் போதும் ஜோஸ் பட்லர் அதிரடியாக ரன்களை குவித்தாலும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஜேமி ஸ்மித் 38 ரன்களை எடுத்தார்.
188 ரன்கள் இலக்கு
20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் அணியின் வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை கொடுத்து தடுமாற்றம் அடைந்தனர். அனுபவம் வாய்ந்த சீனியர் பிளேயரக்ள் லியாம் டாவ்சன் பவுலிங்கால் தடுமாற்றம் அடைந்தனர். ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்கு 167 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டி20 தொடரில் 1 -0 என முன்னிலை வகிக்கிறது. இதில், இங்கிலாந்து அணியின் வீரர் லியாம் டாவ்சன் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.





















