மேலும் அறிய

அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் வழங்குவதாக கூறி பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேம் அயோத்தியில் கடந்தாண்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் போராட்டம், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், ராமர் கோயிலின் பிரசாதத்தை வீட்டிற்கே தருவதாக கூறி இணையவழியில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்தது அம்பலத்திற்கு  வந்துள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்தவர்  ஆஷிஷ் சிங். இவர் காதி ஆர்கானிக்.காம் என்ற இணையதளம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 

ராமர் கோயில் பிரசாதம்:

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவிற்கு முன்பு தொடங்கப்பட்ட  இந்த இணையதளம் வாயிலாக ராமர் கோயிலின் பிரசாதம் வீட்டிற்கே அனுப்பப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவரிடம் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களுக்கும் பிரசாதம் வேண்டுமென விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதுடன், சிறப்பு பிரார்த்திக்கப்பட்ட நாணயங்கள், ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்த சிலைகள் தருவதாகவும் விளம்பரப்படுத்தி அதற்கு கட்டணமும் வசூலித்து வந்துள்ளார். பக்தர்களிடம் இருந்து ரூபாய் 10.49 கோடி வரை வசூலித்துள்ளார்.  அதில் ராமர் கோயிலின் பிரசாதம் வழங்குவதாக கூறி ரூபாய் 3.85 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளார். 

இத்தனை கோடி மோசடியா?

ராமர் கோயிலின் அதிகாரப்பூர்வ அறக்கட்டளைக்கும் அவரது இணையளத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில், இந்த இணையதளம் குறித்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் புகார் அளித்தனர். 

இதையடுத்து, இந்த இணையதளத்தை கண்காணித்த போலீசார் அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் இவரது இணையதளம் வாயிலாக ரூபாய் 10.49 கோடி வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. அதில் பிரசாத விற்பனைக்கு மட்டும் ரூபாய் 3.85 கோடி ரூபாய் வரை அவர் வசூலித்துள்ளார்.

பக்தர்களிடம் பணம் ஒப்படைப்பு: 

இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து திரும்பி ஆஷிஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மோசடி, நேர்மையற்ற முறையில் பொருட்களை விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள  ஆஷிஷ் சிங்கிடம் இருந்து 2.15 கோடி ரூபாயை பறிமுதல் செய்து அயோத்யா போலீசாரிடம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 520 பக்தர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தனர். 

சமீபகாலமாக இந்தியாவில் பல விதமான இணையவழி மோசடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகளவு செல்லும் இடங்கள், மக்கள் அதிகளவு பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை, டிக்கெட் விற்பனை உள்ளிட்டவை மூலமாக பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget