மேலும் அறிய

L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார். 

2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் பொய்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தொகுதி மறுவரையறை  என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க, பாஜக சதி செய்வதாக திரு.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

2001-ல் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்கள் தொகை வெகுவாக வளர்ந்துவிட்டது. ஆகவே, கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆகவே, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. 

தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார். 

தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது:

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் அவை பாதிக்கப்படக்கூடாது என்பதால், விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெறும் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்து விட்டது. தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட, நாட்டில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போதும் தெளிவுபடுத்தினார். ஆனால் மு. க. ஸ்டாலின் அவர்கள், தவறான தகவல்களை தெரிவித்து மக்களை திசை திருப்பும் அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களையும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் துணைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி தொகுதி மறுவரையறை பற்றி பேசவில்லை. 

முதல்வரால் இதை செய்ய முடியாது:

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களின் கூட்டம் என்று அறிவித்து, பிசுபிசுத்த கூட்டம் நடத்திய திமுக, இதற்காக டெல்லியில் 'இன்டி' கூட்டணி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை. டெல்லியில் 'இன்டி' கூட்டணி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை திரு. ராகுல் காந்தியை வைத்து அறிவிக்க வேண்டியது தானே. 

முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனெனில் 'இன்டி' கூட்டணி தலைவர்களே திமுகவின் கட்டுக்கதையை நம்புவதற்கு தயாரில்லை. இது தெரிந்து தான் அறிக்கை மேல் அறிக்கை விட்டு பல்லவி பாடிக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர். 

அவரிடம் நான் கேட்கும் கேள்விகள் இது தான். 

2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி  பிரதிநிதித்துவம் குறையும்?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்திய பிறகும் தொடர்ந்து பொய்யுரைப்பது ஏன்? 

அறிவிக்காத ஒன்றை வைத்து விஷமப் பிரசாரத்தை திமுக செய்வது ஏன்?
தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை, திரு. ராகுல் காந்தி, திரு. அகிலேஷ் யாதவ்,  செல்வி. மம்தா பானர்ஜி,  திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லையே ஏன்? 

'இன்டி' கூட்டணி நம்பவில்லை

முதலமைச்சரின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை திரு. ராகுல் காந்தி உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள். தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலினின் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது. 

2027ம் ஆண்டு நடத்தப்படவுள்ள  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? 

தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே பூச்சாண்டி கிளப்புவதை விட்டு விட்டு நான் ஏற்கனவே கூறியபடி, நிர்வாக சீர்குலைவில் இருந்து தமிழக அரசை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget