மேலும் அறிய

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்; வானில் அணிவகுத்த பலூன்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்

குழந்தைகளை கவரும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன. இதனை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியின் அழகை கண்டு கண்டு ரசிக்கவும், சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. சர்வதேச பலூன் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் திரள்வது வழக்கம். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்து கொண்டே கண்டுகளிக்கலாம். இவை தரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். ஒரு பலூனில் மூன்று பேர் வரை பறக்கலாம்.

நேற்று பலூன் திருவிழாவிற்கான சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் சோதனை ஓட்டத்தை பார்க்க அதிகாலையில் வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா சுற்றுலா துறை சார்பில் இன்று துவங்கியது. இந்த பலூன் திருவிழா இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்; வானில் அணிவகுத்த பலூன்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்

இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட், பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது.  காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படும். 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள், பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் உள்ள பலூன்கள் உள்ளிட்டவை பறக்கப்பட உள்ளன. குழந்தைகளை கவரும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட விதவிதமான பலூன்கள் இடம் பெற்று இருந்தன. இந்த பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

நிலை நிறுத்தப்பட்ட பலூனில் ஏற ஒரு நபருக்கு 1,500  ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதிகாலை வானில் பறந்த பலூன்கள் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு கண் கவரும் விதமாக உள்ளது எனவும், புதிதாக குழந்தைகளை கவரும் விதமாக பலூன்கள் உள்ளதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த வருடம் போட்டி நடத்தும் வெளிநாட்டு நபர்கள் மட்டுமே பலூனில் பறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், பொதுமக்களும் பலூனில் பறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget