America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களிலேயே கொட்டித் தீர்த்ததால், குவாடலூப் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 100-ஐ தாண்டியுள்ளது. மழை தொடர்ந்து வரும் நிலையில், வெள்ளப்பெருக்கும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், தற்போது 150-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பல் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில், மத்திய கெர் கவுண்ட்டியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், டெக்சாசின் தென்-மத்திய பகுதியில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களிலேயே பெய்ததால், இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது மழை தொடர்ந்து வருகிறது.
குவாடலூப் ஆற்றிலிருந்து வெளியேறி தண்ணீர், ஊருக்குள் புகுந்து, வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியதையடுத்து, அங்கிருந்தவர்கள் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தி கடந்த சில நாட்களாகவே இடி, மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசும் நிலையில், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது
கெர் கவுண்டியில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 10 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஊருக்குள் வெள்ளம் ஏற்பட்டு, அதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 100-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியின் ஆற்றங்கரையோரம் இருந்த கோடைகால முகாமில் தங்கியிருந்த சிறுமிகள் 27 பேர் கடந்த 7-ம் தேதியன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரை ஒதுக்கியுள்ளதாகவும், அதனால், வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 104 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
150-க்கும் மேற்பட்டோர் மாயம்
இந்த சூழலில், பெரு வெள்ளத்தால் மேலும், 160-க்கும் மேற்பட்டடோர் மாயமாகியுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் க்ரெக் அப்பாட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தைவிட, மாயமாகியுள்ளோரின் எண்ணிக்கை தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு மற்றும் மாயமாகவர்கள் குறித்த தகவல் தெரிவிக்க பிரத்யேக எண் வழங்கப்பட்ட நிலையில், இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அப்பாட் தெரிவித்துள்ளார்.

மேலும், கெர் பகுதியை சுற்றிப்பார்க்க வந்தவர்கள் ஏரமானோர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.





















