Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்
ராகுல்காந்தி தள்ளிவிட்டதால் தான் என் மண்டை உடைந்து விட்டது என பாஜக எம்.பி புகார் சொன்ன நிலையில், ஆமாம், நடந்துச்சு, ஆனால் உண்மை என்ன தெரியுமா என சம்பவத்தை விளக்கியுள்ளார் ராகுல்காந்தி.
அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய் பீம் முழக்கத்துடன் எம்.பிக்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தை அலறவிட்டுள்ளனர். மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியினர் தான் அம்பேத்கரை அவமதிப்பதாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பாஜக எம்.பி பிரதாப் சந்திர சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டது.
ராகுல்காந்தி மோதலில் எம்.பி ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அவர் வந்து விழுந்ததில் தானும் கீழே விழுந்து மண்டை உடைந்ததாகவும் எம்.பி தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ராகுல்காந்தியிடமே நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‘இது எல்லாம் உங்கள் கேமராவிலேயே இருக்கும். நான் நாடாளுமன்றத்தில் செல்ல முயன்றேன். அப்போது பாஜக எம்.பிக்கள் என்னை தடுத்து தள்ளிவிட்டனர். அவர்கள் என்னை மிரட்டினார்கள். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. மல்லிகார்ஜூன கார்கேவையும் பிடித்து தள்ளிவிட்டார்கள். ஆனால் இந்த தள்ளுமுள்ளுவில் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நுழைவுவாயில் வழியாக உள்ளே போகும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுத்தனர். அவர் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துவதும் அம்பேத்கரை அவமதிப்பதும் தான் இங்கே முக்கியமான பிரச்னை” என கூறியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளே நுழையும் போது பாஜகவினர் தடுக்கும் வீடியோவை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.