தக் லைஃப் படத்தை தடை செய்ய போராட்டம்..பெங்களூர் பிரபல திரையரங்கம் செய்த தக் லைஃப்
கமல் மன்னிப்பு கேட்கவில்லை எனில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்போம் என கன்னட ஃபிலிம் சேம்பர் தெரிவித்துள்ள நிலையில் பெங்களூரில் பிரபல திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகுமா ?
தக் லைஃப் படத்தில் ஆடியோ லாஞ்சில் கன்னட மொழி பற்றிய கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என கமல் சொன்னதற்கு கன்னட மொழி சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமலின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். இரண்டு நாட்களுக்குள் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட ஃபிலிம் சேம்பர் சார்பாக மறுபக்கம் தன்னுடைய கருத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது என்ற கமல்
இன்று பத்திரிகையாளரை சந்தித்த கமல். " நான் எந்த மொழி குறித்தும் தவறாக பேசவில்லை . அப்படி பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன். அரசியல் காரணத்திற்காக சிலர் என்மீது வன்மத்தை கொடுக்கிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் பதிலும் சொல்ல மாட்டேன். அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு இருந்துகொண்டே இருக்கும். இது ஜன நாயக நாடு . சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்" என கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
பெங்களூர் திரையரங்கம் செய்த தக் லைஃப்
கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கம் தம் லைஃப் படத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தக் லைஃப் படத்தின் முன்பதிவுகள் விரைவில் துவங்கும் என்றும் கமல் ரசிகர்கள் தயாராக இருக்கும்படியும் பெங்களூரைச் சேர்ந்த விக்டரி சினிமாஸ் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
ಒಂದೇ ಹೃದಯ, ಒಂದೇ ಕನಸು, ಒಂದೇ ಭಾವನೆ: ஒரே இதயம், ஒரே கனவு, ஒரே உணர்ச்சி.
— VICTORY CINEMA (@Victory_Cinema) May 30, 2025
Controversy aside, let’s celebrate cinema 🎥 #ThugLife (Tamil + Eng Subs) storms into Victory Cinema soon. Brace for Kamal Haasan’s powerhouse performance in Mani Ratnam’s epic. Booking opens soon—stay tuned!… pic.twitter.com/Pdy0MqTau9





















