மாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight
ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக சொந்த மாமனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற மச்சான் ஜாமினில் வெளிய வந்த நிலையில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திம்மராயன் ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார்.இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் இவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிய வந்த சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் பொன்னேரி பகுதியில் நோட்டமிட்ட மர்ம நபர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சாராமாரியாக வெட்டினர்.
இவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். சொந்த மாமனை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்து ஜாமீனில் வெளியே வந்த மச்சானை மர்ம நபர்கள் சர மாறியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தேடிவந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீசார் 1 மணி நேரத்தில் அச்சமங்கலத்தில் சுற்றி வளைத்து மர்ம நபர்களை கைது செய்தனர். மேலும் தந்தையை கொன்றதால் மகன் பழிக்குப் பழி வாங்கிய சம்பவம் ஜோலார்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















