AIRPORT-ல் திடீர் தாக்குதல் அச்சத்தில் கனிமொழி! தரை இறங்காமல் தவித்த விமானம் | Kanimozhi at Mascow
மாஸ்கோ விமான நிலையத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல நடத்தப்பட்ட நிலையில் கனிமொழி கருணாந்தி எம்.பி சென்ற விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவராக கனிமொழி கருணாநிதியை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில், கனிமொழி சென்ற விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதனால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில மணி நேரம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தர்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கனிமொழி கருணாநிதி எம்.பி சென்ற விமானம் தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்துள்ளது. பின்னர், நீண்ட நேரத்திற்குப் பின் பத்திரமாக தரை இறங்கியது.
சில மணி நேரம் தாமத்திற்கு பின் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்ற விமானம் பாதுகாப்பாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதன்பின் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்துக்கட்சி எம்பி-க்கள் குழுவினை வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மாஸ்கோவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.





















