மேலும் அறிய

ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்

மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு வரை மிகச் சிறப்பான முறையில் 80 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் அனைத்திலும் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ.21.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோடியம்மன் கோயில் பகுதியில் இருந்து பைபாஸ் சாலையை முழுமையாக சீரமைக்க ரூ.7 கோடிக்கு நிதி கோரி அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அதுவும் அனுமதி கிடைக்கும் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த மேயர் சண்.ராமநாதன் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு வரை மிகச் சிறப்பான முறையில் 80 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்

முக்கியமாக தஞ்சையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு தரமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்பு குடிநீர் அனைத்து பகுதியிலும் கிடைக்க செய்தோம். அதேபோல் தற்போது 80 சதவீதம் சாலைகள் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மீதமுள்ள 20  சதவீத சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன்படி தார் சாலைகளுக்கு ரூ.13.65 கோடி, கான்கிரீட் சாலைகளுக்கு ரூ.5.3 கோடி , புதிய பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ.2.47 கோடி என மொத்தம் ரூ.21.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் வைக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக பணிகள் தொடங்கி விரைந்து முடிக்கப்படும்.

இதேபோல் தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் பகுதியில் இருந்து பைபாஸ் சாலையை முழுமையாக சீரமைக்க ரூ. 7 கோடிக்கு நிதி கேட்டு அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அந்த நிதியும் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த சாலைப் பணிகள் அனைத்தும் இரண்டு மாத காலத்திற்குள் முழுமையாகவும், தரமாகவும் நிறைவேற்றப்படும். 

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் திருக்கயிலாய வலம் வரும் பாதையை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பது, கண்காணித்து கேமராக்கள் அமைப்பது போன்ற பணிகள் தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி நிதியிலிருந்து செய்து தரப்பட உள்ளது.

மேலும் பெரிய கோயில் எதிரில் உள்ள கார் பார்க்கிங் சாலைகளும் மேம்படுத்தப்பட உள்ளன. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகளிலும் இரு புறமும் திறந்தவெளி கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். இதனால் முழுமையாக சாலைப்பணிகள் முடிந்த மாநகராட்சி என்று தஞ்சை இடம் பிடிக்கும். தற்போது வரை தஞ்சை பெரிய கோயில் சாலை உட்பட முக்கிய சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை உணர்ந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறோம். இவ்வாறு  அவர் தெரிவித்தார். 

பேட்டியின் போது மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Embed widget