மேலும் அறிய

199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?

TN Government High Speed Internet: "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளது"

இணையதளம் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இணையதளம் சேவை நகர்ப்புறங்களை பொருத்தவரை எந்தவித பிரச்சனைகள் இன்றி கிடைத்து வருகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் அதிவேக இணைய சேவை மிக எளிதில் கிடைக்கின்றன. நகர்ப்புறங்களை பொறுத்தவரை அதிவேக இணைய சேவை வழங்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. 

இணைய சேவையில் பாகுபாடு

கிராமப்புறங்களில் நிலைமையோ தலைகீழாக இருக்கின்றன. அதிவேக இணைய சேவை என்பது கிராம மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. கிராமங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் அதிவேக இணைய சேவை என்பது, எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. எனவே இந்த பாகுபாட்டை போக்குவதற்காக மத்திய அரசு சார்பில் "பாரத் நெட்" திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. 

மத்திய அரசின் திட்டம்

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை தமிழ்நாடு கண்ணாடி இழை வலை அமைப்பு நிறுவனம் ( Tamil Nadu fibernet corporation limited ) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முன்பே துவங்கி வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிவேக இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இறுதி கட்டத்தில் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் இதற்காக 55 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 11,800 கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் புதைக்கும் பணிகள் முழுமையாக முடிவு அடைந்துள்ளன. வனத்துறை அனுமதி தராததால் ஒரு சில இடங்களில் மட்டுமேச கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 4000 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரத்திற்குள் மேலும் 4000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அடுத்த சில நாட்களில் ஏஜென்சிகள் நியமனம் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இணைப்பு கிடைப்பது எப்போது ?

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து வீடுகளுக்கும் அதிவேக இணையதள சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில், இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இணையதள சேவை வழங்கும் அணி அடுத்த மாதத்தில் இருந்து துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கட்டண விவரங்கள் என்ன ?

கிராமப்புறங்களை பொருத்தவரை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதாவது வீடுகளுக்கு 199 ரூபாய் கட்டணத்திலிருந்து அதிவேக இணையதலை சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோக 399 மற்றும் 499 ஆகிய விலைகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OTT இலவசமாக கொடுக்கவும் அதற்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக ரூ. 899 மற்றும் ரூ. 1199 என்ற இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனம் என அனைத்து, தரப்பிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. கருத்துகளின் அடிப்படையில் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தில் பயன்படுவது எப்படி ?

கிராமங்களை பொறுத்தவரை இந்த திட்டம் கிராம பஞ்சாயத்து மூலமாக, பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் இதற்காக அப்ளை செய்யும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget