குடும்ப அரசியல்னு சொல்லி நீங்களும் சேர்ந்து...ஆண்டவர் கமலையே ஆடவைத்த பத்திரிகையாளர்
திமுகவுடன் அரசியல் கூட்டணி வைத்தது குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு கமல் கோபப்பட்டு பதில் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

தக் லைஃப் படத்தை வெளியிட தடை
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் என இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தக் லைஃப் படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் கன்னட மொழி தொடர்பான கமலின் கருத்து கன்னட மொழியை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கன்னட அமைப்புகள் சில கருதுகின்றன. கமல் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காத காரணத்தினால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட திரைப்பட சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் கர்னாடகாவில் உள்ள கமல் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.
மன்னிப்பு கேட்க மறுத்த கமல்
இப்படியான நிலையில் இன்று கமல்ஹாசன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் " நான் எந்த மொழி குறித்தும் தவறாக பேசவில்லை . அப்படி பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன். அரசியல் காரணத்திற்காக சிலர் என்மீது வன்மத்தை கொடுக்கிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் பதிலும் சொல்ல மாட்டேன். அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு இருந்துகொண்டே இருக்கும். இது ஜன நாயக நாடு . சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்" என கமல் பேசினார்
திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு கடுப்பான கமல்
அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்தது. தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் நீதி மையம் சார்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கமலிடம் பத்திர்கையாளர் கேள்வி எழுப்பினார் . மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியபோது திமுகவை குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று விமர்சித்த நீங்கள் இப்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்கிற கேள்வியை கேட்டதும் கமல் பதிலளிக்காமல் திரும்பினார். பின் கோபமாக 'நாட்டிற்கு தேவை என்பதால் தான் வந்தேன்' என பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இன்று மரியாதை நிமித்தமாகச்… pic.twitter.com/ofTXzQuzrS
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 30, 2025





















