Schools Reopen: பள்ளிகள் திறப்பு; அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அடுத்தடுத்துப் பறந்த உத்தரவு- அமைச்சர் அன்பில் அதிரடி!
TN Schools Reopen 2025: பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில், மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் பள்ளிகள் இயக்கம் தொடர்பாகவும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினோம். கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்.
👩🎓 இடைநிற்றலைக் கண்காணித்து, இடைநிற்றல் இருப்பின் அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.
🧹 மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
📒 இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
👨🎓 முந்தைய கல்வியாண்டை விட, இக்கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
🏫 பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.
✍️ உடனடித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
🧑🏫 மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்.
🚸 மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்திட வேண்டும்.
🤽♀ உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.
💐மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்போம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் பதிவிட்டுள்ளார்.
கல்வி சார் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜெர்மனிக்கு உலகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் சென்றுள்ளார்.
அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 27, 2025
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை… pic.twitter.com/DLflSxlrEB
இதை அடுத்து, காணொளிக் காட்சி மூலம் அமைச்சர் அன்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






















