Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
ஏபிபி நாடு நடத்திய தடம் பதிக்கும் தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் இந்தாண்டு ஆவின் ஊழியர்களுக்கு இந்தாண்டு நாங்கள் போனஸ் வழங்குவோம் என்று தெரிவித்தார்.

ஏபிபி நாடு நடத்திய தடம் பதிக்கும் தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் இந்தாண்டு ஆவின் ஊழியர்களுக்கு இந்தாண்டு நாங்கள் போனஸ் வழங்குவோம் என்று தெரிவித்தார். ஏபிபி நாடு இம்பாக்ட் மேக்கர்ஸ் கான்க்லேவே 2025-ல் பங்கேற்று உரையாடிய அமைச்சர் தங்கம் தென்ன்சரசு இதனை தெரிவித்துள்ளார்.
ரூ500 சம்பாதிப்பது மிக கடினம்:
முடிந்தளவு சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதை எனது கொள்கையாக வைத்துள்ளேன் என்றார். தொடர்ந்து. அமைச்சர் பதவி மட்டுமின்றி சமூக பணிகள் எனக்கு இருந்தது “வேலையில்லை என்ற நமது பார்வை தவறு. வேலை கிடைக்காததற்கு திறன் இடைவெளியே காரணம் என்று அறிந்துகொண்டேன்.
விவசாயிகள் குறித்து பேசிய அவர் அமைச்சர் பதவி மட்டுமின்றி சமூக பணிகள் எனக்கு இருந்தது வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய விஷயம். அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன் என்றார்.” பால் கறந்து அதில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டுதான் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள்.
”ஒரு விவசாயி எப்படி சமாளிக்கிறார் என்று இன்று யாருக்கும் தெரியவில்லை ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடிமன் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. மண்வெட்டியை பிடித்து ஒரு நாள் முழுக்க வேலை செய்தால் அவர்களுக்கும் 500 ரூபாய் கிடைக்கும் என்றார்.”
ஆவினுக்கும், அமுலுக்கும் உள்ள வித்தியாசம்
ஆவினுக்கும், அமுலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் ஆகும், ஆவின் என்பது அரசாங்கத்துடையது அமுல் விற்பனையை விலையை உயர்த்தினால் யாரும் போராடமாட்டார்கள். ஆவின் விலையை உயர்த்தினால் போராடுவார்கள். ஆவின் இல்லை என்றால் பால் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் என்றார். அனைத்து விவசாயிகளுக்கும் மாடு வாங்க லோன் கொடுக்கப்படும். இந்த வருடம் சவால் விடுக்கிறேன் ஆவின் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்போம். அனைத்து விவசாயிகளுக்கும் மாடு வாங்க லோன் கொடுக்கப்படும்.
திராவிடம் என்பது அடையாளம்
திராவிடம் என்ற சொல் இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த அப்போதைய பூர்வ குடிமக்களுக்கான அடையாளம் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் தங்களை திராவிடர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.தமிழ் மூத்த மொழி, திராவிடத்தை சேர்ந்தது தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றார்.
பாஜக எதிர்பார்ப்புகள் கொஞ்ச நாள்தான்:
பாஜக-விற்கான எதிர்பார்ப்புகள் எல்லாம் இன்னும் கொஞ்சநாள்தான் எனவும் பாஜக சமத்துவத்தை ஏற்கிறோம் என்றோல் மனு நீதியை கொளுத்த வேண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பாஜக ஒன்றுமே செய்ய முடியாது.
பாஜவிற்கு என்ன ஐடியாலஜி இருக்கு:
பாஜக சமத்துவம் என்று சொல்லமுடியுமா?, மனஸ்மிருதி, வர்ணாஸ்ரம் குப்பையில் போடுவோம் என்று பாஜக சொல்லமுடியுமா?குமரி மாவட்டத்தில் பாஜகவால் வெல்ல முடியாது. ஐடியாலிஜி என்பது ரொம்ப ரொம்ப முக்கியது. பாஜவிற்கு என்ன ஐடியாலஜி இருக்கிறது. அதை கேட்டால் அவர்கள் இறங்கி ஓடிவிட்டார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சிலம்பம் மற்றும் அடிமுறை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிமுறை என்றும், சில பகுதிகளில் களரி என்றும், சில பகுதிகளில் சிலம்பம் என்றும் கூறப்படுகிறது. அதை மீட்டுருவாக்க செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.






















