Lionel Messi : இத்தனை சாதனைகள்... எனினும் எட்டாத இலக்கு... கடைசி உலகக் கோப்பையை வெல்வாரா மெஸ்ஸி?
கால்பந்து உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு பெற உள்ளதாக தகவல்..
கால்பந்து உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் இருந்த ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு பிறகு மிகவும் முக்கியமான வீரராக லியோனல் மெஸ்ஸி வலம் வருகிறார். அத்துடன் தற்போது கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அது தான் தன்னுடைய கடைசி தொடராக அமையும் என்று மெஸ்ஸி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் கால்பந்து விளையாட்டில் தற்போது வரை மெஸ்ஸி வைத்துள்ள சாதனைகள் என்னென்ன?
லியோனல் மெஸ்ஸி கால்பந்து க்ளப் போட்டிகளில் மிகவும் முக்கியமான பல சாதனைகளை படைத்துள்ளார். அவரின் சாதனை விவரம்..
சாம்பியன்ஸ் லீக் குரூப் பிரிவில் அதிக கோல்கள்: 78 கோல்கள்
சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒரே அணிக்கு அதிக கோல்கள்: 120 பார்சிலோனா அணி
சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல்கள்: மெஸ்ஸி 123 (2வது இடம்)
லாலீகா தொடரில் அதிக கோல் அடித்த வீரர்: 473 கோல்கள்
லாலீகா தொடரின் ஒரே சீசனில் அதிக கோல்கள்: 50 (2011-12 சீசன்)
லாலீகா தொடரில் அதிக பட்டம் வென்ற வெளிநாட்டு வீரர்: 6 பட்டங்கள்
லாலீகா தொடரில் அதிக ஹாட்ரிக் அடித்த வீரர்: 36 ஹாட்ரிக்
அதிக முறை பலோன் டி விருது வென்ற வீரர்: 7 முறை
இவை தவிர அர்ஜென்டினா அணிக்காக விளையாடியும் மெஸ்ஸி சில சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். அதன் விவரம்..
அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகள்: 162
அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள்: 86
உலகக் கோப்பை போட்டியில் குறைந்த வயதில் கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்: மெஸ்ஸி (18 வயது 357 நாட்கள்)
தென் அமெரிக்கா நாட்டிற்கு அதிக கோல் அடித்த வீரர்: 86 கோல்கள்
லியோனல் மெஸ்ஸி இத்தனை சாதனைகளை தன் பக்கம் வைத்திருந்தாலும் அவருக்கு உலகக் கோப்பை மட்டும் இன்னும் எட்டவில்லை. மெஸ்ஸி இம்முறை தன்னுடைய 5வது கால்பந்து உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார். அவற்றில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஜெர்மனி அணி வீழ்த்தியது. சமீபத்தில் 2021ஆம் ஆண்டில் தான் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக வென்றார்.
The dream 💭 pic.twitter.com/57yl0XfRe7
— Leo Messi 🔟 (@WeAreMessi) October 6, 2022
ஆகவே அதேபோல் முறையாக தன்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.