அனல்பறக்கும் IND vs PAK மேட்ச்! தம்பிகள் விளையாடுவதை பார்க்கும் தல தோனி - வீடியோவைப் பாருங்க
IND vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தோனி தொலைக்காட்சியில் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

IND vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது.
டிவியில் பார்த்த தோனி:
முகமது ரிஸ்வான் - செளத் ஷகில் ஜோடி நிதானமாக ஆடி வந்த நிலையில், இந்த போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mahiya watching the game from a shoot. ☺👑🦁#ChampionsTrophy #Dhoni #INDvsPAK pic.twitter.com/jk4S2X1UXm
— sev7en (@Saransh07_) February 23, 2025
விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு தோனி சென்றிருந்த நிலையில் அங்கு தோனி இந்த போட்டியை நேரலையில் கண்டு வருகிறார். தோனி கிரிக்கெட் பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த கேப்டன் ரிஸ்வான் 77 பந்துகளில் 3 பவுண்டரி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்திய அணியில் தற்போது ஆடி வரும் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்கள்.
பாகிஸ்தானை பதற வைத்த தோனி:
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று தந்த கேப்டன் தோனி ஆவார். மேலும், தோனி என்பவர் கிரிக்கெட் உலகில் அறியப்பட்டதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் சதத்தின் காரணமே ஆகும். விசாகப்பட்டினத்தில் நடந்த அந்த போட்டியில் தோனி 148 ரன்கள் அடித்து தன்னை கிரிக்கெட் உலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ரன்ரேட்டை வைத்திருப்பவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனி தலைமையிலான டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தானை வீழ்த்தியே இந்தியா கோப்பையை வென்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தோனி ஆடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக தோனி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

