![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய தெப்ப திருவிழா - ஹம்ஸ வாகனத்தில் காட்சியளித்த சாமி
மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி நாள்தோறும் சிறப்பு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.
![கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய தெப்ப திருவிழா - ஹம்ஸ வாகனத்தில் காட்சியளித்த சாமி Karur: Theppa festival at Kalyana Venkataramana Swamy Temple TNN கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய தெப்ப திருவிழா - ஹம்ஸ வாகனத்தில் காட்சியளித்த சாமி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/17fb454078da525941fcca051be48fdf1677482986120183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு சுவாமி இன்று ஹம்ஸ வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி நாள்தோறும் சிறப்பு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற திருவீதி உலா காட்சியில் சுவாமி ஹம்ஸ வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க காட்சியளித்தார். ஆலயம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா உற்சவர் ஹம்ஸ வாகன திருவீதி உலா விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
வெங்கமேடு நடு குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மாசி மாத திருவிழா.
ஆண்டுதோறும் மாசி மாதம் பல்வேறு அம்மன் ஆலயங்களில் மூன்று நாள் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் கரூர் மாவட்டம், வெங்கமேடு, நடு குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி கரகம் கிணற்றிலிருந்து ஆலயம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ பகவதி அம்மன் கரகம் கிணற்றுப் பகுதியில் பாலிக்கப்பட்டு அதற்கு பல்வேறு வண்ண மாலைகள் அறிவித்த பிறகு மேல தாளங்கள் வானவேடிக்கையுடன் கோவில் பூசாரி கரகத்தை தலையில் சுமந்து பாரு முக்கிய வீதியில் வழியாக ஆலயம் வந்தார்.
அதை தொடர்ந்து ஆலயத்தில் வைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கரகத்திற்கு பூசாரி மகா தீபாராதனை காட்டினார். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர், வெங்கமேடு, நடுகுளத்துப்பாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய திருவிழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)