மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
துரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. கோவிலில் நடைபெறும் மத்திய கால பூஜையில் கலந்துகொண்டு சுவாமி மற்றும் அம்மனை சாமி தரிசனம் செய்யுள்ளார்
அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமித்ஷா சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார் மதுரை ஆதினம். மதுரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார்.

மேலும் மதுரை ஆதினத்தின் மூலமாக வெளியாகும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தை மதுரை ஆதினம் வழங்கினார்.
உள்துறை அமைச்சர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ள நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவிலை சுற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அமைச்சர் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வுறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் காலை 11 மணி வரை அனுமதிக்கப்படும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 12 மணி வரை சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கு விடுதிக்கு உள்துறை அமைச்சர் புறப்பட்டு சென்றவுடன் அங்கு தொழிலதிபர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.





















