வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு மழைக்கால முகாம்களை தங்களது கார்களுக்காக வரும் ஜுன் 20ம் தேதி வரை நடத்துகிறது.

இந்தியாவில் கார்களின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலம் என்றாலே வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு இடர்கள் உருவாகுவது வழக்கம். குறிப்பாக, கார்கள் பயன்படுத்துபவர்கள் மழையால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
டாடா நடத்தும் மழைக்கால முகாம்:
இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு மழைக்கால முகாமை நடத்துகிறது. இந்த முகாம் நேற்று முன்தினம் (6ம் தேதி) தொடங்கியது. இந்த முகாம் வரும் ஜுன் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் நாடு முழுவதும் உள்ள 500 முகாம்களில் நடக்கிறது.
500 நகரங்கள்:
500 நகரங்களில் டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட 1090 சர்வீஸ் ரூம்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின்பல நகரங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது.
மழைக்காலங்களில் வாகனங்களை ஓட்டுவதில் உள்ள சிரமங்கள், மழையில் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவதில் உள்ள சிரமங்களையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் டாடா வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
30 பரிசோதனைகள்:
இந்த முகாமில் கார்களுக்கு 30 பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் கார்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் இந்த முகாமில் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் கார் வாஷ் செய்யப்படுவது மட்டுமின்றி உதிரி பாகங்கள், என்ஜின் ஆயில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் குறைந்த விலையில் செய்து தரப்பட உள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நடத்தும் இந்த முகாம்களில் டாடா கார் பயன்படுத்துபவர்கள் பங்கேற்க அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோ ரூமில் சென்று மேலும் விவரங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வகை கார்களான டாடாவின் கர்வ், டிகோர், பஞ்ச், நெக்ஸன், சஃபாரி வகை கார்களும் இந்த முகாம்கள் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக டாடா திகழ்கிறது. டாடா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், டாடா கார்கள் தரும் பாதுகாப்பு அம்சம் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது அதிகளவாக இருக்கிறது.





















