கங்குவா முதல் தக் லைஃப் வரை தோல்வி ஏன்?.. சிறிய பட்ஜெட் பீல்குட் படங்கள்
2025ஆம் ஆண்டில் வெளியான 3 பெரிய ஹீரோக்களின் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. ஆனால், சிறிய பட்ஜெட்டில் வெளியான படங்கள் வசூலில் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் 100 கோடி முதல் 300 கோடி வரை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் தடுமாறி வருகின்றன. ஒரு பெரிய பட்ஜெட் படங்கள் தடுமாறினால் பல காரணங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தடுமாறக்கூடிய பெரிய பட்ஜெட் படங்கள் சில நேரங்களில் கதை சுவாரஸ்யமாக இல்லாததால், அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தடுமாற்றம் அடைகிறது. மேலும், சில படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால் அவை எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் போகிறது என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
கங்குவா முதல் தக் லைஃப் வரை
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ, அஜித் நடித்த விடாமுயற்சி, கமல் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள தக் லைஃப் போன்ற படங்கள் வரை தோல்வி தொடர்கிறது. படம் வெளியான 2 நாட்களிலேயே தக் லைஃப் திரைப்படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு எழுந்த விமர்சனத்தை காட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு தக் லைஃப் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை காட்டிலும் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மக்களின் ரசனைக்கேற்ற வெற்றியாக மாறியிருக்கிறது.
பீல் குட் படங்கள்
இளம் இயக்குநர்கள் இயக்கிய லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள்
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய லாபத்தை சம்பாத்துள்ளது. ஆனால், ரூ.300 கோடி ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்களை திரையரங்குகளில் பார்க்கும் அளவிற்கு இல்லை. இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முழுவதும் பார்த்துவிட்டுதான் ரிலீஸ் செய்கிறார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக ஒரு படத்தின் வெற்றிகாக யூடியூபர் இன்ப்ளூயன்சர்களை வைத்தும் புரோமோஷன் செய்து போலியான விமர்சனங்களை வைத்து ரசிகர்களை கவர முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கதைக்கு பஞ்சமா?
பெரியே ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் கதையே இருப்பது இல்லை. ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், கண்ணை கசியும் ரொமான்ஸ் காட்சிகள் இருந்துவிட்டால் படம் ஹிட் என்ற நம்பிக்கையில் நடிக்க வருவதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இளம் இயக்குநர்கள் சிறிய கதைகளை வைத்து நல்ல படங்களை தர முயற்சிக்கின்றனர். தற்போது ரசிகர்கள் பிரம்மாண்ட தயாரிப்பை காட்டிலும் வலுவான கதையை தான் எதிர்பார்க்கின்றனர். பெரிய இயக்குனர் மற்றும் பெரிய நடிகர்கள் இருந்தாலும் கதை தரமாக இல்லாவிட்டால் தோல்வியை தான் பெறுகிறது. 2025 ஆண்டு தொடங்கிய 6 மாதங்களில் 3 பெரிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





















