மேலும் அறிய
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி பாடப்பட்டதால் சர்ச்சை !
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் குளறுபடி ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
Source : whats app
மதுரையில் தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கிய பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி பாடப்பட்டதால் சர்ச்சை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடைக்கு வருகை தந்த நிலையில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் பாடப்படுவதாக அறிவித்த சில நொடியில் மேடையில் இருந்தவர்களும் மைதானத்தில் கூடியிருந்தவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தொடங்கி பாட முடியாமல் குழப்பத்தில் தவித்தபடி திணறினர். பின்னர் தொடர்ந்து பாடினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் குளறுபடி
தமிழகத்தில் நடைபெறும் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது போன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குளறுபடி ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















