மேலும் அறிய

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !

தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க மண்டல், ஜில்லா, மாநில நிர்வாகிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி - அமித்ஷா பேச்சு.

 பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை கூறியவுடன் மீண்டும் கோஷமிட்ட ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.

பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா
 
மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்று முடிந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். மேடையில் அமித்ஷா பேசுகையில்..,” மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து இந்த உரையை தொடங்குகிறேன். இந்த மண்ணின் சொக்கநாதரையும், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை வணங்குகிறேன். தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மக்களை சந்தித்து தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். மதுரை 3 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மாநகரம். இந்த மண்ணின் மைந்தன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன்.
 
இது தான் மோடி அரசு
 
முருகனுக்கான மாநாடு ஜூன் 22 நடைபெறுகிறது. அதனை வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும். இந்த கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும். 2026ல் தேர்தலில் NDA கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். நான் டெல்லியில் இருந்தாலும் தமிழ்நாடு மீது தான் என்ன காதுகள் இருக்கும். தமிழக முதல்வர் கூறுகிறார்., அமித்ஷா அவர்களால் திமுகவை தோற்கடிக்க முடியாது. அது உண்மை தான். ஆனால்., மக்கள் உங்களை தோற்கடிக்க காத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நாடித் துடிப்பாக சொல்கிறேன் தி.மு.கவை மக்கள் தூக்கி எறிவார்கள். அப்பாவி மக்கள் கொள்ளப்பட்ட போது வடக்கில் ஆதரவு கிடைத்தது., ஆனால் ஆப்பேரஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. பெஹல்காம் தீவிர வாத தாக்குதலை கண்டித்து எதிர் நாட்டிற்கு உள் சென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். இது தான் மோடி அரசு. இந்தியாவில் தீவிர வாத தாக்குதலுக்கு முந்தைய அரசு பதிலடி கொடுத்தது இல்லை. ஆனால்., பாஜக அரசு ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல், சார்ஜிகள் ஸ்ட்ரக் ஆகிய நடத்தி இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்.
 
தேர்தல் அறிக்கையை எடுத்து பாருங்கள்
 
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பாஜக நிரூபித்தது. 2025ல் டெல்லியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. 2025 டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்ததோ, அதேபோல் 2026 தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். உங்கள் காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்., தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் வெற்றி பெறும். ஊழல், ஊழல் என ஊறிப் போய் உள்ளது. மக்களுக்கான ஒதுக்கப்படும் திட்டத்தையும், நிதியை தமிழகத்தில் திமுக அரசு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. டாஸ்மாக்கில் 37 ஆயிரம் கோடி ஊழல் செய்து சட்டவிரோத ஆட்சியை தமிழகத்தில் செய்து வருகிறது. திமுக அரசு 100க்கும்100 சதவீதம் தோல்வியை தழுவியது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறும் அரசு 10 சதவீதம் நிறைவேற்றி விட்டு 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறி வருகிறது. தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்து சொல்லுங்கள் .? எத்தனை வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.!
 
மோடிக்கு ஒரு நன்றி கூறினீர்களா
 
இந்த ஆட்சியில் ஜாதிய மோதல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை இல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். 1000 ஆண்டுகள் பழைமையான முருகன் கோவிலை சிக்கந்தர் மலை என கூறுவதற்கு திமுக அரசுக்கு துணிச்சல் வந்துள்ளது. ஜூன்22ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும். தமிழக அரசுக்கு நான் ஒவ்வொரு முறை நினைவு கூற விரும்புகிறேன். உயர்கல்வியை ஏன் தமிழில் இயக்க மறுக்கிறீர்கள்.? உடனடியாக பொறியியல் பட்ட படிப்புக்களை தமிழில் மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் மரபை நாட்டின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற மோடிக்கு ஒரு நன்றி கூறினீர்களா.?
 
உங்கள் கைகளை உயர்த்தி கூறுங்கள்
 
இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு செல்கிறது. 11 ஆண்டுகள் மோடி ஆட்சியில் சாதனை செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 1.53 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது., ஆனால் மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. பெருந்திரளாக வந்துள்ள தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உங்கள் நினைவில் இருக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த நீங்கள் அனைவரும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற  நீங்கள் அனைவரும் தயாரா இருக்கீறீர்களா.? - உங்கள் கைகளை உயர்த்தி கூறுங்கள்” - என அமித்ஷா கூற தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Embed widget