இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
அடுத்த 3 மணி நேரம்:
இதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்சகல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றம் கடலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 7 நாட்கள் எப்படி?
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 8, 2025
சென்னையில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று பல இடங்களில் லேசான அளவு மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு சென்னையில் வானிலை எப்படி இருக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

சென்னையில் நாளை ஓரளவு மேகமூட்டத்துடனும், இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். லேசான/ மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 37 டிகிரி செல்சியஸ் அதிகளவு வெப்பநிலையும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படும்.
காத்திருக்கு மழை:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 8, 2025
வரும் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் சென்னையில் காணப்படுவதுடன், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த நாளில் 36 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாகவும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாகவும் உள்ளது. வியாழக்கிழமை, வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களிலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், லேசான/ மிதமான மழைக்கு பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியசாகவும், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் அதிகபட்சமாக 36 டிகிரியாகவும், கறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






















