சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சென்ஷேசனல் ஹீரோயின்.. எந்த படம் தெரியுமா?.. அதிர்ஷ்டம் கூடி வருது
வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் சென்ஷேசனல் ஹீரோயின் கமிட் ஆகியிருக்கிறாராம்.

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை, இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதை 80களில் நடப்பது போன்று உருவாகி வருகிறது.
பராசக்தி ரிலீஸ் எப்போது?
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும், படம் ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் முன்பணமாக ரூ.25 கோடி பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா பராசக்தி படம் குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்தார். பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் 40 நாட்கள் தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன் வருவதற்காக வெயிட் பன்றோம். மேலும் மதராஸி படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கிறார். அதை முடித்துக்கொண்டு வந்தவுடன் பராசக்தி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.
மதராஸி வெற்றி பெறுமா?
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால், மதராஸி படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார். படத்தின் கதையை மேலும் பட்டி டிங்கரிங் வேலை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
எஸ்.கே படத்தில் கயாடு லோஹர்
பராசக்தி, மதராஸி படம் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கதையை உறுதி செய்துவிட்ட வெங்கட்பிரபு இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு 2 ஹீரோயின்கள் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதை மாநாடு படத்தை போன்று டைம் டிராவல் கதை எனவும் முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கோட் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதை உறுதி செய்தார். இந்நிலையில், இப்படத்தில் டிராகன் பட நாயகி கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த திரை ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
கயாடு அதிர்ஷ்ட தேவதை தான்
டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரே நாளில் சென்ஷேனல் ஹீரோயினாக மாறினார் கயாடு லோஹர். சமூகவலைதள பக்கங்களை திறந்தாலே இவரது வீடியோக்கள் தான் வலம் வந்தன. அவர் கொஞ்சி பேசும் தமிழை ரசிக்க கோடான கோடி ரசிகர்கள் தவம் கிடந்தனர். சமீபத்தில் கல்லூரி விழாவில் பங்கேற்று இளைஞர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து பிடித்த நடிகர் விஜய் என கூறினார். இதைத்தொடர்ந்து தமிழில் அதர்வாவுடன் இதயம் முரளி, சிம்பு 49 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் கயாடு லோஹர் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், கயாடு அதிர்ஷ்ட தேவதை தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.





















