மேலும் அறிய
Kumbh Mela: பிரயாக்ராஜில் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை - கும்பமேளா புகைப்பட தொகுப்பு!
Kumbh Mela: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா பற்றிய புகைப்பட தொகுப்பு இது.
கும்பமேளா புகைப்பட தொகுப்பு!
1/6

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
2/6

வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. ஏராளமான மக்கள் இங்கு வந்து புனித நீராடி சென்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள், பக்தர்கள் நீராடி சென்றனர்.
3/6

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது. அங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக அமைதியை அடைய கங்கை நதியில் நீராடுகிறார்கள். இதுவரைஇதுவரை 43 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/6

மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வந்து புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/6

மகா கும்பமேளா பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வு.
6/6

க்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தூய்மையான தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்வதற்காக கட்டணமில்லா குடிநீர் விநியோகத்தை அரசு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 13 Feb 2025 02:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















