மேலும் அறிய

Vinayaga Chaturthi 2022: நாவல்பழம் முதல் விளாம்பழம் வரை.. சதுர்த்தி பூஜைக்கு ஏற்ற பழங்கள் இவைதான்..

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு பலவிதமான பருவகால பழங்கள் பிரசாதமாக படைக்கப்படும்.

இந்திய புராணங்களில்  பழங்களும் பூக்களும்  தெய்வீகத்துடன் தொடர்புடையவை.  அவற்றில் பல அர்த்தங்களும் கதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.  பூக்களும் பழங்களும் இங்கு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக படைக்கப்படுகிறது.இந்த இந்தப் படையலில் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் கிடைக்கும் பழங்களும் மலர்களும் அந்தந்த தெய்வங்களுக்கு உரித்தாகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2022 அன்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டை போல, இந்த ஆண்டும்   கொண்டாட்டங்கள்,களைகட்ட தொடங்கி இருக்கின்றன. தற்போதைய கொண்டாட்டங்கள் இனிமையான எதிர்பார்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உள்ள அனைத்து தடைகளையும் விலக்குபவர் விநாயகப் பெருமான்.  எனவே, அவரது ஆசியுடன், திருவிழா தடையின்றி தொடங்கி, அற்புதமாக நிறைவு பெறும். அவள் கடலை,பொறி, கொழுக்கட்டை,சுண்டல் மோதகம் என இவருக்கு பிடித்ததாக  இருந்தாலும் கூட, சைவ விலங்கான யானை தலையுடன் இவர் இருப்பதால், இவர் பழங்களை நிரம்ப விரும்புகிறார்.

திருவிழாவின் போது விநாயகப் பெருமானுக்கு பலவிதமான பருவகால பழங்கள் பிரசாதமாக படைக்கப்படும்.  இன்றும் மக்கள் பல இடங்களில் இந்த யானைத் தலைக் கடவுளுக்கு வாழைப்பழ மாலைகளை அணிவித்து வருகின்றனர்.  விநாயகப் பெருமானின் விருப்பப்பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்கள், அதிக சத்தான  மற்றும் உடல் உறுப்புகளை சரி செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளன.  எனவே, விநாயகப் பெருமானின் விருப்பமான பழங்களை பார்த்து,அவற்றின் பயன்பாடு மற்றும் நன்மைகளைப் புரிந்துகொள்வோம்.

 வாழைப்பழங்கள்
 
 விநாயகர் சதுர்த்தி நாளில்   பலவகையான பழங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றில் ஆகச் சிறந்தது வாழைப்பழம் ஆகும். விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது. இதில்  இருக்கும் ரகங்களை பொருத்து வாழைப்பழமானது வருடம் முழுவதும் கிடைக்கிறது. வாழைப்பழமானது எல்லா காலங்களிலும் விநாயகருக்கு படைப்பதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளது. வாழை இலையில்  பொறி,அவல் கடலை ஒருபுறம் சுண்டல் மறுபுறம் ஏனைய பழங்கள் வைத்து  விநாயகருக்கு அருகில் வெற்றிலை பார்க்கோடு இந்த வாழைப்பழம் படைக்கப்படுகிறது . இதில் எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாது உப்புகளும், அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகிறது.இது  விநாயகருக்கு படைத்த பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பழமானது  மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சீதாப்பழம் 

சீதாப்பழம்என்றும் அழைக்கப்படும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுகளை கட்டுக்குள் வைக்கிறது. விநாயக சதுர்த்தியின் போது சீதாப்பழம் விநாயகப் பெருமானுக்கு படைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது, இது சந்தையில் சீதாப்பழத்தின் தேவையை அதிகரிக்கிறது. சீத்தாப்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக இருப்பதால் வீக்கம், புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் பார்வை தொடர்பான கோளாறுகளை சரிசெய்கிறது. இது எடை அதிகரிக்க உதவுகிறது.  ஒரு நோயெதிர்ப்பு ஊக்கி.

விளாம்பழம்

 விளாம்பழம் யானைகளுக்கு மிகவும் பிடித்தமான பழமாகும், எனவே இந்த பழத்தை விநாயகப் பெருமாயு விரும்புகிறார் போலும். யானைத் தலையுடன் இருப்பது அவரது விருப்பத்திற்கு கூடுதல் காரணமாக இருக்கலாம்.  மர ஆப்பிள் என்ற மற்றொரு பெயருடைய இந்த வில்வ பழம்,இதயம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மற்றும் தொற்றுநோய்களை சிரமமின்றி குணப்படுத்துகிறது.   விளாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி ஸ்கர்வியைத் தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் பரவலான வைரஸ் தொற்றுகளைத் தடுக்கிறது.  இதன் மலமிளக்கியான பண்புகள் குடலைச் சுத்தப்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

 நாவல் பழம் 
 
 ஒரு பருவகால பழமாகும், எனவே இது பக்தர்களால் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விநாயகப் பெருமானுக்கு விருப்பமான பழமாகும்.  இந்தப் பழத்தின் மூலம் அவரைச் சமாதானப்படுத்த எளிதான வழி இருக்கிறது.  புதன்கிழமை மாலை, நாவல் பழத்தை வாங்கி  விநாயகருக்கு படைத்து  மறுநாள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்  பிரசாதமாக வழங்க வேண்டும். இதற்கு புராண பின்னணியும் உண்டு.  ஞானம் பெற்ற ஆன்மாக்களால் மட்டுமே காணக்கூடிய நாவல் தீவில் தீவில் நாவல் மரம் நடப்பட்டது.  எனவே, இந்த புனித பழம் விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும்  பழங்களில் மதிப்பு மிக்கதாகும். உடல் எடையை  குறைப்பதில் இந்த பழத்தின் பங்கு முக்கியமானதாகும். இதைத் தொடர்ந்து உண்டு வந்தால்  சர்க்கரை கட்டுக்குள்  இருப்பதோடு, உடல் எடையும்  வெகுவாக குறையும். 
 

தேங்காய்
 
தென்னிந்திய பரம்பரத்தில் பாரம்பரியத்தில்  தேங்காய்க்கு அதி உன்னத இடம் இருக்கிறது. இங்கு நடக்கின்ற எந்த விசேஷமாக இருந்தாலும் தேங்காய் உடைப்பது, தோன்றுதொட்டு இருந்து வருகிறது.  ஏனெனில் இது வழிபாட்டிற்கு மட்டுமல்ல, வழிபாட்டின் போது கடவுளின் உணவாகவே  பார்க்கப்படுகிறது.எந்த ஒரு சுப காரியம் தொடங்கும் முன், தேங்காயை உடைப்பது,தீய சக்திகளை விரட்டுகிறது.  எனவே விநாயகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமானதாக தேங்காய் இருக்கிறது.தேங்காயில் இருந்து பல சுவையான உணவுகள் தயாரிக்கப்படலாம்.அதன் பல்வகை மருத்துவப் பயன்பாடுகளால், இது விநாயகப் பெருமானுடன் தெய்வீகத் தொடர்பைப் பெற்றுள்ளது. 

கொய்யா
 
கொய்யா பருவகால பழங்களில் ஒன்று, எளிதில் கிடைக்கும், சுவையானது மற்றும் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமானது. சில கருத்துகளின்படி இது நீரிழிவு மற்றும் பிற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  இது வைட்டமின் சியின் களஞ்சியமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.  கொய்யாவை வழக்கமாக உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது. ஏனெனில் இது புதிதாகப் பிறந்த குழந்தைகளை நரம்பியல் செயலிழப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின்கள் சி, ஏ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளின் மிக உயர்ந்த உள்ளடக்கத்துடன் இது புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது. கொய்யாவின் சிகிச்சைப் பண்புகள் தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்தி, மன அழுத்தத்தைத் தணித்து, மனநிலை மற்றும் உடலின் ஆற்றல் மட்டங்களை உயர்த்துகிறது. 

மாதுளை
 
இந்த சிவப்பு நிற பழம் படைப்பின் பல அம்சங்களைக் குறிக்கிறது.குறிப்பாக வாழ்க்கை மற்றும் மறுபிறப்பு. திருமணம் முதல் கருவுறுதல் முதல் இறப்பு வரையிலான நிலைகளைக் குறிக்கும் வடிவம், அளவு, நிறம் மற்றும் விதைகளும் அடங்கிய இதில், மிகப்பெரிய தத்துவமே அடங்கி இருக்கிறது.  விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதோடு, மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.  மாதுளம்பழத்தின் தோலுக்கு மருத்துவப் பயன்களும் உண்டு.  இந்த பழத்தை ஜூஸ் செய்து, ஹீமோகுளோபினை அதிகரிக்க ஒரு பானமாக அருந்தலாம்.

மாம்பழம்: 

மாம்பழம் கடவுளின் உணவு மற்றும் அமிர்தம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானது.  விநாயகப் பெருமானுக்கு விருப்பமான உணவாகவும் இது உள்ளது.  உட்புறத்தில் உள்ள மஞ்சள் நிற சதைப்பற்றானது  அனைவருக்கும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. மற்றும் செழுமையான மாம்பழ நறுமணம் அதன் தேன் சொட்டும் சுவையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. இதுவும் விநாயகப் பெருமானுக்கு படைப்பதற்கான ஆகச்சிறந்த கனியாகும்.

இந்த மாம்பழத்திற்கு தனி கதையும் உண்டு,மாம்பழத்தை விநாயகருக்கு தந்ததற்காகவே முருகப்பெருமான் பழனியில் கோபித்துக் கொண்டு போய் நின்ற புராண வரலாறு உண்டு. சில மாநிலங்களில், மக்கள் இந்த புனித நாளில் விநாயகப் பெருமானுக்கு 21 வகையான பழங்களை படைக்கிறார்கள்.  கரும்பு, மா, வேப்பம் பழம், அத்தி, அன்னாசி, ஆரஞ்சு, மோசம்பி, மர ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், பலா, ஆப்பிள், ஆரஞ்சு, சீதாப்பழம், கிவி, திராட்சை, குருதிநெல்லி, நாவல் ஆகியவை  தவிர  கொய்யா மற்றும் மாதுளை என மேற்கண்ட பழங்களை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைப்பது நன்மை பயக்குவதோடு,நமக்கு பழங்களை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புத்தி மதியையும் விநாயகர் சேர்த்து சொல்லித் தருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget