மேலும் அறிய
Ind vs NZ, 1st Test: மூன்று வீரர்கள் அரை சதம் ; முதல் நாளில் 258 ரன்கள் எடுத்து நிறைவு செய்த இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் - ஜடேஜா
1/6

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரஹானே, பேட்டிங் தேர்வு செய்தார்.
2/6

போட்டி நடைபெறுவதற்கு முன்பே, முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய அணியில் அறிமுகமாகும் 303 வது வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
3/6

ஓப்பனிங் களமிறங்கிய மயாங்க் பெரிதாக சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய மற்றொரு ஓப்பனரான கில், அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
4/6

அவரை அடுத்து பேட்டிங் செய்த புஜாரா, ரஹானா ஆகியோரும் ஏமாற்றம் அளித்த நிலையில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்து அடித்து கொண்டிருக்கிறார்.
5/6

ஸ்ரேயஸூடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அரை சதம் கடந்து அசத்தினார். 99 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை, 192 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்த இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
6/6

இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 258 ரன்கள் எடுத்துள்ளது.
Published at : 25 Nov 2021 05:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement