மேலும் அறிய
ஆஸ்கர் வென்ற குறும்படத்தின் நாயகனுக்கு உதவி கரம் நீட்டிய தமிழக அரசு!
வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க அரசு உத்தரவு

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
1/6

முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெள்ளி – குட்டி யானைகளின் உறவை மிக அழகாக காட்டியிருந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
2/6

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தம்பதிகள் இருவரையும் பாராட்டி தலா ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
3/6

மேலும் வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்
4/6

அவர்கள் அனைவருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.
5/6

யானை பராமரிப்பாளர்களாகிய இவர்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
6/6

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடன் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு அவர்களும், வனத்துறை அதிகாரிகளும், பொம்மன், பெல்லி உள்ளிட்ட பாகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Published at : 15 Mar 2023 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion