மேலும் அறிய
1,600 கிலோ ஆடு,பன்றி கறி விருந்தில் 7,000 பேர்: நாமக்கல் போதமலை கருப்பனார் கோயில் விழா படங்கள்
Namakkal Bodhamalai Karuppanar:நாமக்கல் ஆர்.புதுப்பட்டியில் போதமலை கள்ளவழி கருப்பனார் கோயிலில், ஆடு,பன்றி,சேவல் பலியிட்டு,சுமார் 7000 பேர் உணவருந்தினர்.விழாவின் புகைப்படங்களுடன் தகவல்களை பார்ப்போம்.

நாமக்கல், போதமலை கள்ளவிழி கருப்பனார் கோயில்
1/5

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமகரிப்பேட்டை அருகே உள்ள ஆர். புதுப்பட்டியில் போதமலையில் கள்ளவிழி கருப்பனார் கோயில் உள்ளது.
2/5

இக்கோயிலில், தை மாதம் கடைசி ஞாயிறு முப்பஜை விழாவானது பாரம்பரியாக உள்ளது. இவ்விழவானது, சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.
3/5

இந்நிலையில், நேற்று மாலை தொடங்கிய இவ்விழாவில், 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் நேற்று சமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மலையில் உள்ள கோயிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபடுவதாகவும், பெண்கள் செல்லமாட்டார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
4/5

இதையடுத்து, மலையில் உள்ள கோயிலில் வெட்டப்பட்ட ஆடுகள் , பன்றிகள் மற்றும் சேவல்களை சாமிக்கு பலியிட்டு, அதைக் கீழே கொண்டு வந்து சமைத்து, ஆண்கள் - பெண்கள் என அனைவரும் சேர்ந்து சாப்பிடுவர்.
5/5

இக்கோயிலில் 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் என சுமார் 2,500 கிலோ கறி சமைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. இவ்விழாவில், சுமார் 7,000 பேர் வரை உணவு அருந்தி, விழாவை சிறப்பித்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றன.
Published at : 10 Feb 2025 06:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion