மேலும் அறிய
தேவையில்லாத கொழுப்பை குறைக்கனுமா? இந்த கஷாயத்தை குடிங்க... செய்முறை இதுதான்!
தொப்பை கொழுப்பை குறைக்க தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து உட்கொள்வது எப்படி?

இலவங்கப்பட்டை
1/6

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அதற்கு முதலில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். அல்லது அதற்கு மாற்றாக,அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்.
2/6

நன்றாக கலந்து கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3/6

தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் இந்த கஷாயத்தை இன்னமும் ஆரோக்கியமானதாக மாற்றவும் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பிழிந்து உட்கொள்ளலாம்.
4/6

நாம் பசியாக உணரும் போதெல்லாம், அல்லது உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த வெதுவெதுப்பான கஷாய நீரை உட்கொள்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும்.
5/6

மேலும், தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன.
6/6

இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது.
Published at : 13 Nov 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement