Coimbatore Power Shutdown: கோவை மக்களே... நாளைய(17.07.25) மின் தடை லிஸ்ட் வந்துருச்சு! லிஸ்ட்ல உங்க பகுதி இருக்கா?
Coimabatore Power Shutdown: கோவையில் நாளை (17.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் எஸ்.என்.பாளையம், கிணத்துக்கடவு , சிட்கோ (கோவை குறிச்சி) உட்பட பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது

Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை (17.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
எஸ்.என்.பாளையம்
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்
கிணத்துக்கடவு
சூலக்கல், தாமரைக்குளம், ஓகேமண்டபம் பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி
சிட்கோ (கோவை குறிச்சி)
சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























