மேலும் அறிய
விஜயகாந்த் பிறந்தநாளில் விஜய் மாநாடு: 25ஆம் தேதி குலுங்க போகும் மதுரை - சூடுபிடிக்கும் அரசியல் களம்..!
தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட இரண்டாவது மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்

தவெக மாநாடு
Source : whats app
த.வெ.க., 2-வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா யாகபூஜையுடன் முடிந்தது, போலீஸிடம் மாநாடு குறித்த அனுமதி கடிதம் கொடுத்தார் பொதுச்செயலாளர் ஆனந்த்.
மதுரையில் நடைபெறும் மாநாடு
இன்று நடைபெற்ற த.வெ.க.,மாநாட்டின் பூமி பூஜைக்கு முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், கள்ளழகர் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன் மெக்கா படம் நடுவில் இடம் பெற்றது. 15 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் அவர்கள் பாதுகாப்பு வந்து பாதுகாப்பாக செல்லவே இந்த யாக பூஜைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
கால்கோள் விழா
மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாகன பார்க்கிங்க்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடத்துவதற்காக இன்று யாக பூஜை முடிந்தவுடன் காலை 7:00 மணிக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.
தவெக மாநாடு
தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். மதுரையில் முதல்வர் ரோட் ஷோ தொடங்கி, அமித்ஷா தென் மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனைக் கூட்டம், இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு. என மதுரையில் தொடர்ச்சியாக அனைத்து கட்சியினரும் மாநாடு நடத்தி வந்த நிலையில், தற்போது தவெக மாநாடு நடத்த உள்ளது. மதுரையை குறிவைத்து அனைத்துக் கட்சியும் மாநாடு நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.
ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு
இந்நிலையில் மாநாடு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி(25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி என கூறியுள்ளார்.
இந்நிலையில் மாநாடு தொடர்பாக அனுமதி பெறுவதற்காக தவெக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் மதுரை போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனு அளித்த பொதுச்செயலாளர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில்..., " தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையிடம் அனுமதி மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட இரண்டாவது மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















