மேலும் அறிய
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 16: இந்தியா முழுவதிலும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- “ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்' என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும்| தீர்வு காணப்படும். ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும். உங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும்”-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.
- “NDA கூட்டணியில் பாமகவும் இருக்கிறது. நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்”
-அரியலூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு - ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரப்படும்” - பாமகவின் 37வது ஆண்டு விழாவை ஒட்டு கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800க்கும், கிராம் ரூ.9,100க்கும் விற்பனை
- சமோசா, ஜிலேபிக்கு எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் என பரவிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு. சுகாதாரத் துறையின் சுற்றறிக்கை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம்.
- ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து வாரத்திற்கு 525 சர்வதேச விமான சேவைகளை மீண்டும் படிப்படியாக தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.
- வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
- இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் இதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த நிலையில், சடலங்களை புதைக்க இடமின்றி தவிப்பு.
- ஐசிசி மகளிர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார். ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு





















