மேலும் அறிய

Hybrid Midsize SUV: இப்பவே ரோட்ல இந்த 4 எஸ்யுவி தான் அதிகம் ஓடுது.. இதுல ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேடும் வருதாம், எந்த கார்கள்?

Hybrid Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேட் பெற உள்ள, நான்கு மிட்சைஸ் எஸ்யுவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hybrid Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேட் பெற உள்ள, நான்கு மிட்சைஸ் எஸ்யுவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்கிரேட் பெறும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எந்த காரை வாங்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்வதில், விலை முக்கிய பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் உள்நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக உள்ளன. இந்த பிரிவில் மாருதி சுசூகி, ஹுண்டாய், கியா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது பெயரில் கிராண்ட் விட்டாரா, க்ரேட்டா, செல்டோஸ் மற்றும் எலிவேட் ஆகிய கார் மாடல்களை கொண்டுள்ளன. மிகவும் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவிக்களானது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிலிருந்து மேலும் ஒருபடி முன்னேறி செல்லும் விதமாக தங்களது கார் மாடல்களில்,  வலுவான ஹைப்ரிட் அம்சத்தை அடுத்த 9 முதல் 12 மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், ஹைப்ரிட் இன்ஜின் அம்சத்தை பெற உள்ள கார் மாடல்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1. புதிய தலைமுறை கியா செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன்

தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா, 2026ம் ஆண்டின் முதல் பாதியில் தனது அடுத்த தலைமுறை செல்டோஸ் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் சார்பில் உள்நாட்டு சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின் அம்சம் கொண்ட முதல் கார் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை காண்பதோடு, வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயினாக நேட்சுரலி ஆஸ்பிரேடட் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெற உள்ளது. இந்த புதிய வேரியண்டானது அதன் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையிலான எடிஷனை காட்டிலும் கூடுதல் மைலேஜ் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புதிய தலைமுறை கியா செல்டோஸின் டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டுமே ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது ஆகும். இந்த கார் மாடலின் விலை 12 லட்சத்திலிருந்து 21 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட் எடிஷன்

ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் கார் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எலிவேட் கார் மாடலின் ஹைப்ரிட் எடிஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, சிட்டி ஹைப்ரிட் கார் மாடலில் உள்ள, அட்கின்சன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. புதிய தலைமுறை ஹுண்டாய் க்ரேட்டா ஹைப்ரிட் எடிஷன்

உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை க்ரேட்டா கார் மாடலானது 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. அப்போது, உள்நாட்டு சந்தையில் வலுவான ஹைப்ரிட் அம்சத்தை பெறும் ஹுண்டாயின் முதல் கார் என்ற பெருமையையும் க்ரேட்டா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரியுடன் இணைந்து ஹைப்ரிட் அம்சத்திற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஹைப்ரிட் வெர்ஷனின் விலை 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இதனிடையே, கடுமையான பிஎஸ் 7 தரநிலைகளின்படி, புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய தற்போதுள்ள பவர்டிரெய்னை மேம்படுத்த பெரும் செலவாகும் என்பதால், க்ரேட்டா எஸ்யூவியின் டீசல் இன்ஜின் நிறுத்தப்படலாம் என்று துறைசார் தெரிவிக்கின்றன. 

4. மஹிந்திரா XEV 9e ஹைப்ரிட் எடிஷன்

மஹிந்திரா நிறுவனம் தனது முற்றிலும் மின்சார வாகனமான XEV 9e கார் மாடலை , ஹைப்ரிட் வெர்ஷனில் களமிறக்க தயாராகி வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய எஸ்யுவி ஆனது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆனது மின்சார மோட்டருடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வலுவான ஹைப்ரிட் அம்சமானது எஸ்யுவியின் மைலேஜை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.  மஹிந்திராவின் XEV 9e கார் மாடலானது INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த பிளாட்ஃபார்மானது 1.2L ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைப்ரிட் அமைப்பை ஏற்கும் வகையில், கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி ஏதும் இல்லாவிட்டாலும், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சந்தையில் XEV 9e ஹைப்ரிட் எடிஷன் அறிமுகப்படுத்தப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget